பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாதில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், அடுத்தடுத்து நடந்த, இரண்டு மனித வெடிகுண்டு தாக்குதல்களில், 28 பேர் பலியாகினர்.
ஈராக் தலைநகர் பாக்தாதின் மத்திய பகுதியில், பாப் - அல் - ஷராகி மார்க்கெட், வழக்கம் போல், பரபரப்புடன் செயல்பட்டது. அப்போது, அங்கு வந்த இருவர், தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை, அடுத்தடுத்து வெடிக்கச் செய்தனர்.

இதனால், மார்க்கெட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து ஓடினர். அடுத்தடுத்து நடந்த இந்த தாக்குதலில், 28 பேர் உடல் சிதறி இறந்தனர். இதில், தாக்குதல் நடத்தியவர்களும் அடக்கம். மேலும், 73க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என, அஞ்சப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE