சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 21, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்உயரமான பாலம்சீனாவில் உள்ள 'டியூஜ் பாலம்' உலகின் உயரமான பாலம் என அழைக்கப்படுகிறது. இது கியூஜோவ் - யுனான் பகுதிகளை இணைக்கிறது. பெய்பன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைப்பதற்கு முன் இரு பகுதிகளுக்கு இடையிலான பயணம் 5 மணி நேரமாக இருந்தது. பாலம் திறக்கப்பட்டதற்குப்பின் இது ஒரு மணி நேரமாக குறைந்தது. ஆற்றின் தரைப்பகுதியில் இருந்து 1850 அடி

அறிவியல் ஆயிரம்
உயரமான பாலம்
சீனாவில் உள்ள 'டியூஜ் பாலம்' உலகின் உயரமான பாலம் என அழைக்கப்படுகிறது. இது கியூஜோவ் - யுனான் பகுதிகளை இணைக்கிறது. பெய்பன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைப்பதற்கு முன் இரு பகுதிகளுக்கு இடையிலான பயணம் 5 மணி நேரமாக இருந்தது. பாலம் திறக்கப்பட்டதற்குப்பின் இது ஒரு மணி நேரமாக குறைந்தது. ஆற்றின் தரைப்பகுதியில் இருந்து 1850 அடி உயரத்தில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப்பணி 2011ல் தொடங்கப்பட்டு, 2016ல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. பாலத்தின் நீளம் 1.340 கி.மீ.,
தகவல் சுரங்கம்
நீண்டகால தளபதி
இந்திய ராணுவ தலைமை தளபதியாக 1955ம் ஆண்டிலிருந்து இதுவரை 27 பேர் பதவி வகித்துள்ளனர். இதில் நீண்டகாலம் இப்பதவியில் இருந்தவர் மூன்றாவது ராணுவ தலைமை தளபதி கே.எஸ்.திம்மையா. இவர் 1906 மார்ச் 31ல் கர்நாடகாவில் பிறந்தார். 1926ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த பின், ராணுவ தலைமை தளபதியாக 1957 மே 8 - 1961 மே 7 வரை நான்கு ஆண்டுகள் பதவி வகித்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஏழாவது தலைமை தளபதியாக இருந்த பிரமேஜி ஜாம் ெஷட்ஜி (3 ஆண்டு, 222 நாட்கள்) உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X