சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அறிவாலயத்தில் தி.மு.க.,மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டதிற்கு தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். பொது செயலர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மக்கள் கிராம சபை கூட்டங்களை மக்கள் சந்திப்பு இயக்கமாக மாற்றிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துகொள்ளப்படுகிறது.
30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனகவர்னரை கேட்டுக்கொள்வது மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும்.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப றெ வேண்டும். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை சி.பி.ஐ., உடனடியாக கைது செய்ய வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியின் ஊழல்கள் குறித்து அளிக்கப்பட்டுள்ள 97 பக்கங்கள் கொண்ட ஊழல் பட்டியல் மீது கவர்னர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE