வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக நேற்று பதவியேற்ற ஜோ பைடனுக்கு தொடக்க உரையை தயாரி்த்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினய் ரெட்டி என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் நேற்று பதவியேற்றனர். அதிபராக பதவியேற்ற பின் ஜோபைடன் தனது ஏற்புரையில் '' ''அமெரிக்காவை ஒன்றிணைப்பதே எனது முதல் பணி. இந்த நாள் அமெரிக்காவின் நாள் ,ஜனநாயகத்தின் வெற்றி நாள். ஜனநாயகம் வென்றுள்ளது. .'என உரையாற்றினார்.

ஜோ பைடனுக்கு இந்த உரையை தயாரித்து கொடுத்தவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 46 வயது வினய் ரெட்டி ஆவார். இவர் ஜோ பைடனின் உரை தயார் செய்யும் (ஸ்பீச் ரைட்டர்) குழுவில் முக்கிய இடம் பெற்றிருந்தார். இவர் தயாரித்த உரையை தான் அமெரிக்க மக்கள் முன் ஜோ பைடன் வாசித்தார். ஜோபைடனின் ஏற்புரைக்கு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பாராட்டு தெரிவித்தது.
வினய் ரெட்டியின் பெற்றோர் தெலுங்கானாவின் கரீம் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். வினய் ரெட்டி, அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தார். மியாமி பல்கலைக்கழகம் மற்றும் ஓஹியோ மாகாண பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார்.
ஜோபைடன்-ஹாரிஸ் ஆகியோருக்கு , 2020 தேர்தல் பிரச்சாரத்தின் மூத்த ஆலோசகராகவும் உரை எழுத்தாளராகவும் வினய் பணிபுரிந்தார். அதிபரின் உரையை தயார் செய்யும் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE