மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் போண்டாகைடன் நகரில் இருந்து தென்கிழக்கே இருந்து 219 மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நில நடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் டவாவ், முக்கிய வணிக நகரம். இந்த நகரத்திலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.தவாயோ, போண்டாகைடன் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியிருக்கின்றன. வீடுகள் குலுங்கியதால் அலறிய சத்தத்துடன் வீட்டை விட்டு தெருவிற்கு மக்கள் ஓடி வந்தனர்.

நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இருப்பினும் சேதாரம் அதிகம் இருக்கக்கூடுமோ என அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE