ஜன., 22, 1926
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், 1926 ஜன., 22ல் பிறந்தவர், தி.வே.கோபாலையர். திருப்பனந்தாள், திருவையாறு கல்லுாரிகள் மற்றும் பிரான்ஸ் கீழத்திசை ஆய்வுக் கல்விக் கூடத்தின் புதுவை மையம் ஆகியவற்றில் பணிபுரிந்தார்.மரபு வழித் தமிழாசிரியர்களில், இவரே கடைசித் தலைமுறை. தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம், இலக்கியங்களில் புலமை பெற்றிருந்தார். ராமாயணத்திலும், சீவக சிந்தாமணியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தஞ்சை சரஸ்வதி மகால் நுாலகத்தின் வழியாக, பல நுால்களை பதிப்பித்துள்ளார். தமிழறிஞர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், சொற்பொழிவாளர், பேராசிரியர் என, பன்முகம் உடையவர். 2007 ஏப்., 1ம் தேதி, தன், 82வது வயதில் காலமானார்.'தமிழ் நுாற்கடல்' தி.வே.கோபாலையர் பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE