பொது செய்தி

இந்தியா

மதுரை 'எய்ம்ஸ்'சுக்கு மார்ச் இறுதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்து

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மதுரையில் அமையவுள்ள, 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்காக, ஜப்பான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், மார்ச் மாதத்திற்குள் கையெழுத்திட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடுமையான முயற்சிகளுக்கு பின், மத்திய அரசின், எய்ம்ஸ் மருத்துவமனையை, தமிழகத்தின் மதுரையில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின், திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நகரத்
மதுரை, எய்ம்ஸ், ஒப்பந்தம், மருத்துவமனை, மார்ச்

மதுரையில் அமையவுள்ள, 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்காக, ஜப்பான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், மார்ச் மாதத்திற்குள் கையெழுத்திட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடுமையான முயற்சிகளுக்கு பின், மத்திய அரசின், எய்ம்ஸ் மருத்துவமனையை, தமிழகத்தின் மதுரையில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின், திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நகரத் துவங்கின.


எதிர்பார்ப்பு


இந்த விவகாரம், பெரும் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், இத்திட்டத்திற்கான அடுத்த கட்ட நகர்வு எப்போது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதே காலகட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட, மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு, இயங்கத் துவங்கி விட்டன. அங்கு உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கையும் துவங்கி விட்டன. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த புதிய நிலவரம், தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து, நேற்று டில்லியில், மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ பிரிவுக்கான இணை செயலர் நிலம்பூஜ் சரண் ஆகியோரை, மதுரை தொகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன் நேரில் சந்தித்து பேசினார்.


செலவு அதிகரிப்பு


அப்போது, அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான செலவு அதிகரித்துள்ளதால், அந்த நிதியை ஒதுக்குவதற்கான நிர்வாக அனுமதியை வழங்க வேண்டும். மேலும் இதற்கான கடனை வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், உடனடியாக கையழுத்திடுவது அவசியம்.இந்த மருத்துவமனைக்கான இயக்குனர், கண்காணிப்பாளர், துணை நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக அலுவலர்களையும், காலம் தாழ்த்தாமல் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

இதன்பின், வெங்கடேசன் கூறியதாவது:மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில், தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனையும் புதிதாக இணைகிறது. 1,200 கோடி ரூபாயாக இருந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட செலவு, தற்போது, 2,000 கோடி ரூபாயாக உயர்ந்ததற்கு, இதுவே காரணம்.


நடவடிக்கை


இந்த புதிய தொகை குறித்த ஒதுக்கீட்டிற்கு, தனியாக நிர்வாக அனுமதி தேவைப்படுகிறது. மத்திய அமைச்சரவை கூடி, ஒப்புதல் வழங்கினால் தான், இது சாத்தியமாகும்.அதேபோல், ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது; அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் உள்ளது.

இந்த தாமதம் ஏன் மற்றும் எந்த தேதியில் கையெழுத்தாகும் எனக் கேட்டபோது, வரும் மார்ச் இறுதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என, மத்திய சுகாதார துறை செயலர் கூறினார்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகத்திற்கு தேவையான அலுவலர்களையும் படிப்படியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
22-ஜன-202122:18:48 IST Report Abuse
Elango ஒத்த செங்கலுக்கு ஓராயிரம் முறை ஒப்பந்தமாம்..... மதுரையை மதுரா என்று மாற்றினால் நிதி கிடைக்குமா ??? உடனே சங்கிகள் நீங்கள் ஓட்டு போவில்லை அதனால் நிதி இல்லை என்று வருவார்கள். மானம் உள்ளவர்கள் என்றால் தமிழ் நாட்டு ஜிஎஸ்டி வரி வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே ??
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-ஜன-202119:58:50 IST Report Abuse
RajanRajan மத்திய அரசு ஒப்பந்தம் செய்யுறதுனாலே தப்பிச்சு. இல்லேன்னா இவிங்க மனோகரா கட்டிங் வசனம் கேட்டு மாளாதே
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-ஜன-202116:23:16 IST Report Abuse
ஆரூர் ரங் ஜப்பான் நிதி என்பதால் ஜப்பான் துணை முதல்வர் உதவலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X