புதுடில்லி:போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான, கன்னட நடிகை ராகினி திவேதிக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது.
கன்னட திரை உலக பிரபலங்கள் பலரிடம், போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக, கன்னட நடிகை ராகினி திவேதியை, கடந்த செப்டம்பரில், போலீசார் கைது செய்தனர். பெங்களூரு சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ராகினியின் ஜாமின் மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் ராகினி மேல்முறையீடு செய்தார்.
மனுவில், 'போதைப் பொருள் பயன்படுத்தியதாக, போலீசார் என்னை கைது செய்தனர். என் வீட்டிலிருந்து எந்த போதைப் பொருளையும் போலீசார் கைப்பற்றவில்லை. எனக்கு, ஜாமின் வழங்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ராகினிக்கு ஜாமின் அளித்து உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE