பொது செய்தி

இந்தியா

விவசாயிகள் - போலீஸ் பேச்சு தோல்வி: திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி :டில்லியில், குடியரசு தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணி தொடர்பாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், போலீசார் நடத்திய இரண்டாவது சுற்று பேச்சும் தோல்வியில் முடிந்தது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள், டில்லி எல்லையில், 57 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்கு தீர்வு காண, விவசாய
விவசாயிகள், போலீஸ், பேச்சு தோல்வி,  டிராக்டர் பேரணி

புதுடில்லி :டில்லியில், குடியரசு தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணி தொடர்பாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன், போலீசார் நடத்திய இரண்டாவது சுற்று பேச்சும் தோல்வியில் முடிந்தது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள், டில்லி எல்லையில், 57 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்கு தீர்வு காண, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, 10 சுற்று பேச்சு நடத்தியும் பலனில்லை.கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த, விவசாய சங்கங்கள் முடிவு செய்து உள்ளன.

'இந்தப் போராட்டத்துக்கு தடை விதிப்பது குறித்து, டில்லி போலீசார் தான் முடிவு செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், டில்லி போலீஸ் உயர் அதிகாரிகள், நேற்று முன்தினம் பேசினர்.'டில்லியில், ரிங் சாலையில் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு பதிலாக, குண்டலி - மனேசர் - பல்வால் விரைவு சாலையில் நடத்தலாம்' என, போலீசார் தெரிவித்தனர்; இதை, விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளுடன், போலீசார் நேற்று மீண்டும் பேசினர். இந்த பேச்சும், தீர்வு காணப்படாமல் தோல்வியில் முடிந்தது.

விவசாய சங்க பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:டில்லிக்குள் பேரணி நடத்த விரும்புகிறோம். ஆனால், டில்லிக்கு வெளியே பேரணி நடத்த, போலீசார் வலியுறுத்துகின்றனர்; அதை நாங்கள் ஏற்காததால், பேச்சில் முடிவு எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
23-ஜன-202113:24:28 IST Report Abuse
R.MURALIKRISHNAN அப்ப இவர்கள் விவசாயிகள் அல்ல களவாணிகள்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
22-ஜன-202120:56:58 IST Report Abuse
a natanasabapathy பேரணியை தடை செய்து அனைவரையும் கைது செய்து அந்தமான் தீவுக்கு அனுப்பிவைக்க வேண்டும். விவசாயி போர்வையில் ஒரு காட்டுகூட்டம் அநியாயம் செய்துவருகிறது
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
22-ஜன-202119:58:09 IST Report Abuse
Balaji எதையுமே ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பவர்களிடம் என்னத்தை பேச... வெட்டிகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X