மங்கோலியா பிரதமர் உக்னாஜின் குரேல்சுக். கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட தாய் சேய் ஆகிய இருவருக்கும் மங்கோலிய அரசு மருத்துவமனையில் தவறாக நடத்தப்பட்டதால் அங்கு மக்கள் கிளர்ந்தெழுந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து மங்கோலியா பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உள்ள சிறிய நாடு மங்கோலியா. நிலக்கரி ஏற்றுமதி மூலமாகவே இந்த நாடு லாபம் ஈட்டி வருகிறது. பௌத்தர்கள் அதிகம் வாழும் இந்த சிறிய நாட்டில் மங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
32 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும் இந்த நாட்டில் சிறு மற்றும் குறு தொழில்கள் மூலமாகவே பெரும்பாலான குடிமக்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் கடந்தாண்டு துவக்கம்முதல் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்தபோது மங்கோலிய அரசு தனது எல்லைகளை மூடியது. இதனால் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மிகக் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் குழந்தையை ஈன்றெடுத்த தாய் ஒருவர் கொரோனா பாதுகாப்பு உடைகள் இன்றி சாதாரண பைஜாமா உடையில் ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு -25 டிகிரி காய்ச்சல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தாய்மார்களை அதிகம் மதிக்கும் கலாச்சாரம் கொண்ட நாடு மங்கோலியா. புதிதாக குழந்தையை ஈன்றெடுத்த தாயை அரசு மருத்துவத் துறையினர் இவ்வளவு அஜாக்கிரதையாக நடத்துவதைக் கண்டித்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மங்கோலிய தலைநகர் உலான்பாடர் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர்.

இதனை அடுத்து போராட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் உக்னாஜின் குரேல்சுக், தனது அஜாக்கிரதை காரணமாக அந்த தாய் இவ்வாறு நடத்தப்பட்டதாகவும் இதற்கு பொறுப்பேற்று தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE