பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு இருப்பதாகமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
![]()
|
இது குறித்து கூறப்படுவதாவது: சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனை காலம் முடிவடைந்து, வரும் 27ல், அவர் விடுதலை செய்யப்பட உள்ளதாக, சிறை நிர்வாகம், சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம், சிறையில் சசிகலாவுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் இருந்ததால், கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
எனினும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், 'சி.டி., ஸ்கேன்' எடுப்பதற்காக, பவுரிங் மருத்துவமனையில் இருந்து, விக்டோரியா மருத்துவமனைக்கு, சசிகலா நேற்று மாற்றப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று உள்ளதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
![]()
|
இது குறித்து மருத்துவ கண்காணிப்பகாளர் ரமேஷ் கண்ணா கூறுகையில்ஆர்டிபி.சிஆர் சோதனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது என கூறினார்.
இதனைிடையே சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டிருப்பதால் அவர் விடுதலை ஆகும் தினம் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE