சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 4 பேரை அடித்து கொன்ற இலங்கை வீரர்கள்

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
ராமேஸ்வரம் :நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேரை இரும்பு தடியால் கொடூரமாக அடித்து கொலை செய்த இலங்கை கடற்படை வீரர்களை கைது செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் ஜன.,24ல் ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட உள்ளனர்.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா 30, மண்டபம் முகாம் இலங்கை அகதி சாம் 28, உச்சிப்புளி நாகராஜ் 52, செந்தில்குமார் 32 ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம்
தமிழக மீனவர்கள், கொலை, இலங்கை வீரர்கள்

ராமேஸ்வரம் :நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேரை இரும்பு தடியால் கொடூரமாக அடித்து கொலை செய்த இலங்கை கடற்படை வீரர்களை கைது செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் ஜன.,24ல் ராமேஸ்வரம் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட உள்ளனர்.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா 30, மண்டபம் முகாம் இலங்கை அகதி சாம் 28, உச்சிப்புளி நாகராஜ் 52, செந்தில்குமார் 32 ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து ஜன.18ல் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். அன்று மதியம் 2:00 மணிக்கு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.


வயர்லெசில் கதறல்



இலங்கை வீரர்கள் எஸ்.எல்.என்., என்ற ரோந்து கப்பலில் படகை கட்டினர். கடல் சீற்றத்தால் படகின் இரும்பு கேன்ட்ரி உரசி கப்பல் சேதமானது. ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் இரவு 11:00 மணிக்கு மற்றொரு ரோந்து கப்பல் மூலம் வேண்டுமென்றே 3 முறை மோதி படகை மூழ்கடித்தனர்.படகில் இருந்த 4 மீனவர்களும் வயர்லெஸ் கருவியில், ''16வது சேனலில் எங்கள் படகு மீது இலங்கை நேவி கப்பல் மோதுகிறது. உயிருக்கு ஆபத்து எங்களை காப்பற்றுங்கள்'' என தொடர்ந்து குரல் எழுப்பினர். உதவி கிடைக்காத நிலையில் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் மீட்ட இலங்கை வீரர்கள் கயிற்றில் கட்டி இரும்பு தடியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

அந்தபகுதியில் மீன்பிடித்து ஜன.,19ல் கரை திரும்பிய கோட்டைபட்டினம் மீனவர்கள் கூறுகையில், ''மீனவர்களின் குரல் எங்களது வயர்லெஸ் கருவியில் கேட்டது. ஆனால் இலங்கை வீரர்களின் கொலை வெறிக்கு பயந்து மீட்க செல்லவில்லை'' என வருத்தப்பட்டனர்.ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், ''மீனவர்களை அடித்து கொலை செய்ததற்கு ஆதாரமாக அவர்களது உடலில் ரத்த கறை உள்ளது. கடலில் மூழ்கி இருநாட்களுக்கு பின் மீட்டால் ரத்தகறை இருக்காது. உடலில் தோல் உரிந்து காணப்படும். இது திட்டமிட்ட படுகொலை'' என்றனர். இதனை மத்திய, மாநில உளவுத்துறை உறுதிப்படுத்தி உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சேசு கூறுகையில், ''கொலையை மறைக்க மீனவர்கள் கடலில் மூழ்கியதாகவும், ஜன.,20 மாலை 5:00 மணிக்கு இரு உடலும், ஜன.,21 மதியம் 1:00 மணிக்கு இரு உடலும் மீட்டதாக இலங்கை வீரர்கள் நாடகமாடுகின்றனர். ஜன.,20ல் மீட்டதாக கூறும் மீனவர் உடலில் ரத்தகறை, காயம் உள்ளது. இதுவே கொலைக்கு சாட்சி. இலங்கை வீரர்கள் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் இருநாடு அதிகாரிகள் முன்னிலையில் மீனவர்களின் உடற்கூறாய்வு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும். கச்சத்தீவு அருகே மீன்பிடி உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் ஜன.,24ல் சாலை மறியல் நடக்கும்'' என்றார்.----

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-ஜன-202112:27:16 IST Report Abuse
Malick Raja காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் நடக்காத கொடுமையல்லவா இது .. அறிவுடையோர் சிந்தனைக்கு மட்டுமே இது ஏற்புடையது
Rate this:
visu - Pondicherry,இந்தியா
23-ஜன-202121:01:53 IST Report Abuse
visuஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது அதுதான் சந்தேகம்...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஜன-202111:19:01 IST Report Abuse
Malick Rajaஅதற்குத்தான் முன்னதாகவே குறிப்பிட்டுவிட்டேன் ..உம்போன்றவர்கள் இருக்கும் நிலையை .. படித்தால் அல்ல அறிவு ஒன்று இருந்தால் மட்டுமே புலப்படும் . நீர் அப்படி இருப்பதில் வியப்பிருக்க வாய்ப்பே இல்லை .. காரணம் குனிந்து ,தவழ்ந்து ,படுத்து ,நெலிந்து உருளாமல் ஊர்ந்து சென்றவரின் கூட்டத்தில் இருப்பது அல்லவே ......
Rate this:
Cancel
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
23-ஜன-202106:01:15 IST Report Abuse
Ravi Chandran சீமான் போல் ஒரு தமிழ் பற்று கொண்ட ஒருவன் தமிழக முதல்வர் ஆவது ஒன்றே, இதற்கு தீர்வு
Rate this:
visu - Pondicherry,இந்தியா
23-ஜன-202121:20:38 IST Report Abuse
visuநல்ல தெளிவான மனநலம் கொண்ட நேர்மையான மனிதர்தான் தமிழ் நாட்டுக்கு தேவை இவர் போன்ற இனவாதி பிரிவினை எண்ணம் கொண்டவர் அல்ல .இந்தியா கூட்டாட்சி தத்துவத்தையே புரிந்து கொள்ள முடியாதவர்...
Rate this:
Cancel
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
23-ஜன-202105:58:48 IST Report Abuse
Ravi Chandran இவர்களுக்கு எல்லாம் சீமான் தான் சரியான ஆள். அவர் கையில் அதிகாரம் வரவேண்டும். அவர் சொல்வது போல் தமிழக படை ஒன்று தேவை. இந்திய படைக்கு தமிழர் என்றால் உறுத்துவதில்லை. கேரளாகாரநை சுட்டால் சும்மாவிடுவனா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X