அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் கிராம சபை 1 கோடி பேர் ஆதரவு : ஸ்டாலின்

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 21, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என, 21 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வார்டுகளிலும், மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், ஒரு கோடியே, 1 லட்சம் மக்கள் ஆதரவு
 மக்கள் கிராம சபை, ஆதரவு, ஸ்டாலின், திமுக, தி.மு.க., மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், நேற்று நடந்தது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.


கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:



'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என, 21 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், வார்டுகளிலும், மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், ஒரு கோடியே, 1 லட்சம் மக்கள் ஆதரவு அளித்திருப்பது, ஜனநாயகத்தின் முன்னேற்றங்களை காட்டும் பக்கங்களில், தனி முத்திரையாக பதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே, வேறெங்கும் காண முடியாத அளவுக்கு, ஊழல் ஆழமாக புரையோடிப் போன ஆட்சியாக, அ.தி.மு.க., திகழ்கிறது.பொள்ளாச்சி பாலியல் வழக்கில், முக்கிய குற்றவாளிகளை, மேலும் தாமதமின்றி கைது செய்ய வேண்டும்.வேளாண் சட்டங்களை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, உடனே நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




'டெண்டர்கள் ரத்தாகும்'



ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், 'லாஸ்ட் மினிட்'டில் கையெழுத்துப் போட்டு, எப்படியாவது கஜானாவை சுரண்டி, காலி செய்து விட வேண்டும் என, ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது. பொதுப்பணி துறையின் நீர்வள ஆதாரத்துறையில், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய, மூன்று மாதங்களில், ௨,855 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர்களை விட்டுள்ளனர்.
தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன், கமிஷனுக்காக விடப்படும், டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். பழைய டெண்டர் முறைகேடுகள் குறித்து, தயவு தாட்சண்யமின்றி விசாரணை நடத்தப்படும். தவறு செய்தோர் யாராயினும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


கிராம சபை கூட்டம்

தி.மு.க., தலைமை அறிக்கையில், 'வரும், 24ல், திருத்தணி தொகுதி; அன்று மாலை மதுரவாயல் தொகுதியில், ஸ்டாலின் பங்கேற்கும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வால்டர் - Chennai,இந்தியா
23-ஜன-202107:58:25 IST Report Abuse
வால்டர் விவசாயிகள் மேல உண்மையிலேயே சுடலைக்கு அக்கறை இருந்தா டில்லில போயி அந்த போராட்டம் முடியற வரை கலந்துட்டு வரணும். பத்து வருசமா சும்மாதானே இருக்க. அதை விட்டுப்போட்டு எடப்பாடி கூட நானும் விவசாயிதான்னு சண்டை போட்டுட்டு இருக்க. முதல்வருக்கு ஆயிரம் சோலி இருக்கும் அவரால போக முடியாது. மக்கள் பிரதிநிதின்னா மக்களுக்கு சேவை செய்யத்தானே.
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
22-ஜன-202123:45:54 IST Report Abuse
C.SRIRAM வாழ்க்கையில் பொய் தவிர ஏதும் பேச மாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பார் போலும் .
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு. - கழக பாசறை தொண்டன் ,இந்தியா
22-ஜன-202120:23:11 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு. ஹைட்ரோகார்பன் எடுத்தே தீருவோம். எட்டு வழிச்சாலை வந்தே தீரும். ஸ்டெர்லைட் திறந்தே தீருவோம்.... நீட் நடந்தே தீரும்.கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ், குட்கா பலவேறு ரைடுகள் நடத்தி,என்ன கண்டுப்பிடிக்கப்பட்டது. என்ன மேல் நடவடிக்கை?? கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன் ராவ், குட்கா பலவேறு ரைடுகள் நடத்தி,என்ன கண்டுப்பிடிக்கப்பட்டது. என்ன மேல் நடவடிக்கை?? தமிழகத்தில் ரயில்வே, தபால்துறை என எல்லா துறைகளிலும் 90% வட இந்தியர்களை வேலைக்கு அமர்த்திய மோடியையும் அதை பார்த்து க்கொண்டிருக்கு எடப்பாடியையும், ஆட்சியை விட்டு அகற்றுவோம்
Rate this:
s.srikanth - chennai,இந்தியா
23-ஜன-202111:18:51 IST Report Abuse
s.srikanthஎப்பப்பாத்தாலும் சொன்னதையே சொல்லின்றுக்கே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X