பொது செய்தி

இந்தியா

அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
பீஜிங்: 'அருணாச்சல பிரதேசம், எங்களுடைய எல்லைக்குட்பட்டது. அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்வதை யாரும் எதிர்க்க முடியாது' என, நம் அண்டை நாடான சீனா, மீண்டும் அடாவடியாக தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில், அத்துமீறி, சீன ராணுவம் நுழைந்ததையடுத்து, இரு நாட்டு படைகளும் எட்டு மாதங்களுக்கு மேலாக குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு
India, China, Arunachal Pradesh, அருணாச்சல்

மீண்டும் சீண்டுகிறது சீனா

பீஜிங்: 'அருணாச்சல பிரதேசம், எங்களுடைய எல்லைக்குட்பட்டது. அங்கு கட்டுமான பணிகள் மேற்கொள்வதை யாரும் எதிர்க்க முடியாது' என, நம் அண்டை நாடான சீனா, மீண்டும் அடாவடியாக தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லை பகுதியில், அத்துமீறி, சீன ராணுவம் நுழைந்ததையடுத்து, இரு நாட்டு படைகளும் எட்டு மாதங்களுக்கு மேலாக குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.


இந்நிலையில், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில், ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கி வருகிறது. அங்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.அருணாச்சல பிரதேசத்தை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திபெத்தின் ஒரு பகுதி என, சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் அங்கு கட்டுமானம் மேற்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news




இது குறித்து, சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியுள்ளதாவது:
தெற்கு திபெத் பிராந்தியம் குறித்த சீனாவின் நிலைப்பாடு, எப்போதும் தெளிவாக உள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை; அது திபெத்தின் ஒரு பகுதி தான்.
எங்கள் சொந்த எல்லைக்குட்பட்ட பகுதியில், நாங்கள் கட்டுமான பணிகள் மேற்கொள்வது இயல்பான ஒன்று; அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
22-ஜன-202116:32:34 IST Report Abuse
Velumani K. Sundaram கண்டிப்பாக சீனா அவர்கள் இடத்தில்தான் கட்டிடம் கட்டுவார்கள். நமது இடத்தில் 1 சென்டிமீட்டர் எடுத்தால்... ஓராயிரம் ஏவுகணைகளை சந்திப்பார்கள். I know MODI JI's policy... "IF YOU ARE BAD... i AM YOUR DAD"
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
22-ஜன-202115:38:41 IST Report Abuse
ஜெயந்தன் அதனாலென்ன......நாம அங்கே ஒரு கோவில் கட்டிடுவோம்....
Rate this:
Anand - chennai,இந்தியா
22-ஜன-202116:08:13 IST Report Abuse
Anandசர்ச் கட்டி பாவ மன்னிப்பு வழங்கலாம்........
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
22-ஜன-202115:27:38 IST Report Abuse
vnatarajan எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு சீனா அருனாச்சல பிரதேசத்தை திபதோடு சேர்ந்தது என்று கூறுகிறார்கள். அதற்குரிய ஆவணங்கள் சீனா வெளியிட்டதா.
Rate this:
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
22-ஜன-202123:57:22 IST Report Abuse
Velumani K. Sundaramஆமாம் ஆமாம்... மூலபத்திரம் எங்கே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X