சென்னை : ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவிடம் பிப்ரவரி முதல் வாரத்தில் விசாரணை நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா தனது நிர்வாக காலத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார். முறைகேடான நியமனங்கள் பணியிட மாற்றம் போன்றவற்றை தடுத்து பணி நியமனங்களுக்கு விதிகளை உருவாக்கினார்.
பல்கலையின் நிர்வாக செலவில் பல கோடி ரூபாய் உபரி செலவுகளை குறைத்தார். அதனால் பல்கலையின் வருவாய் உயர்ந்தது. ஆனால் பணி நியமனங்கள் மற்றும் டெண்டர் போன்றவற்றில் துணைவேந்தர் சுரப்பா முறைகேடு செய்ததாக உயர்கல்வி துறைக்கு கடிதங்கள் வந்தன.

எனவே ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக உயர்கல்வி துறை உத்தரவிட்டது. இந்த ஆணையம் சார்பில் பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி தேர்வு அதிகாரி வெங்கடேசன் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. துணைவேந்தர் சுரப்பாவுக்கும் சம்மன் அனுப்பி பிப். முதல் வாரத்தில் விசாரணை நடத்தப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE