சென்னை: சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மணச்சநல்லூரில் நடந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதாகவும், இதனால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக உதயநிதி ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கூறி, பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE