புதுடில்லி: நேர்மறையான முடிவுகள் கிடைக்க, நமக்கு நேர்மையான எண்ணங்கள் அவசியம். அதுவே தன்னிறைவு இந்தியாவிற்கு முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேஜ்பூர் பல்கலையில் பட்டம் பெற்று செல்லும் மாணவர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில், என்ன நடக்கும் என பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனால், தொற்றில் இருந்து நாடு விரைவாக மீண்டது. மேட் இந்தியாவில் கிடைத்த தீர்வுகள் மூலம் கொரோனாவை எதிர்த்து நாம் போராடினோம். நமது நம்பிக்கைக்கு ஏற்ப விஞ்ஞானிகள் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். நமது நாடு, 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.

தற்போது, புதிய இந்தியாவில், தன்னிறைவு பெற்ற இந்தியாவில் அனைவரும் வாழ்கிறீர்கள். தற்போது முதல், 100வது சுதந்திர தினம் வரை, நமது நாட்டு இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. நேர்மறையான முடிவுகள் கிடைக்க, நமக்கு நேர்மையான எண்ணங்கள் அவசியம். அதுவே, தன்னிறைவு இந்தியாவிற்கு அவசியம்.
நேர்மறையாக மனதை மாற்றி கொள்வதற்கு, ஆஸி.,யில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இந்திய அணி மிகச்சிறந்த உதாரணம். இந்திய அணி படுதோல்வி அடைந்ததுடன், பல்வேறு சவாலுக்கு மத்தியில் விளையாடியது. குறைந்த அனுபவம் கொண்ட வீரர்கள் இருந்த போதும், நம்பிக்கையுடன் விளையாடி, சாதனை படைத்தது. இந்திய அணியின் வெற்றி, பெரிய பாடம். நாமும் நமது மனதை நேர்மறையானதாக மாற்றி க்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE