வெள்ளி முதல் வியாழன் வரை (22.1.2021 - 28.1.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
சந்திரன், புதன், செவ்வாயால் நன்மை ஏற்படும். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.
அசுவினி: இதுவரை சந்தித்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். இனி வியாபாரத்தில் கணிசமான லாபம் உண்டு. மன உறுத்தலில் இருந்து விடுபடுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.
பரணி: எதிரும் புதிருமாக இருந்த தம்பதியர் மனம்விட்டு பேசுவர். போட்டியாளர்கள் திகைக்கும் அளவுக்கு புது யுக்தியை கையாளுவீர்கள். எல்லோரிடமும் அன்புடன் நடந்து கொள்வீர்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
கார்த்திகை 1: பிள்ளைகளின் கூடாபழக்கங்கள் விலகும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அடகு வைத்திருந்த நகைகளை மீட்பீர்கள். பேச்சில் தெளிவு பிறக்கும். நட்பு வட்டம் விரியும்.
ரிஷபம்
குரு, புதன், சந்திரனால் நற்பலன்கள் உண்டு. கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.

கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான வாரமாக அமையும். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவீர்கள். பணியாளர்கள் நல்ல செயல் ஒன்றைச் செய்வீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும்.
ரோகிணி: ஏமாற்றங்கள் அனைத்தும் காணாமல் போகும். கடுமையான உழைப்பின் பலனைப் புரிந்து கொள்வீர்கள். குடும்பத்தினரின் ஆதரவுடன் உங்கள் எதிரிகளை வென்று மகிழ்வீர்கள். திட்டமிட்டு பணிகளை செய்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பிள்ளைகள் தரும் அறிவுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எதிர்பாரா நல்ல திருப்பம் ஒன்று இந்த வார இறுதிக்குள் வரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
செவ்வாய், ராகு, கேது அனுகூல பலனை தருவர். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.
மிருகசீரிடம் 3,4: மேலதிகாரியின் மன நிலையில் மாற்றம் இருக்காது. பலவகையான அறிவுரைகளை சாமர்த்தியமாக கையாளும் வாரம். முறையாகவும், சரியாகவும் திட்டமிட்டு எதையும் செய்வீர்கள்.
திருவாதிரை: சில மாதங்களாக வேலை இல்லாதோருக்கு நல்ல வேலை கிடைக்கும். இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு அழகும், பொலிவும் கூடும். சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
புனர்பூசம் 1,2,3: கூடுதல் உழைப்பால் களைப்பாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பழைய மகிழ்ச்சியான நினைவுகளை கிளறும்படியான சந்தர்ப்பம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை கையாள்வதில் கவலை ஏற்பட்டு விலகும்.
கடகம்
புதன், குரு அதிர்ஷ்ட பலன்களை தருவர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
புனர்பூசம் 4: கணவர் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். வருமானத்தில் மாற்றமில்லாமல் இருக்கும். தொழிலில் தேங்கியிருந்த நிலை மாறும். பெண்களின் தொலைநோக்கு சிந்தனையால் ஆதாயம் கூடும்.
பூசம்: பல காலமாக மனதை அரித்த கலக்கம் மறையும். எதிர்கால நன்மைக்கு அஸ்திவாரமான நிகழ்ச்சிகள் நிகழும். முக்கியஸ்தர் ஒருவரின் நட்பு கிடைக்கும். குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள்.
ஆயில்யம்: அனுபவம் மிகுந்த நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரிகள், கலைஞர்களுக்கு புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெரும் பொறுப்பில் இருப்பவர்களின் ஊதியம் உயரும்.
சிம்மம்
புதன், செவ்வாய் நன்மைகளை அள்ளித்தருவர். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.
மகம்: சொத்து விவகாரங்களில் வரவேண்டிய பணம் ஓரளவுக்கு வரும். பிள்ளைகள் உங்கள் மீது மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி ஒன்று நடக்கும். எதிரிகள் மனம் மாறுவார்கள்.
பூரம்: பிரிந்திருந்த குடும்பங்களை சேர்த்து வைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பை பெறுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது நல்லது.
உத்திரம் 1: பிள்ளைகள் செய்யும் சாதனைகளால் பெருமிதம் அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். சாப்பிடவும், துாங்கவும் நேரமின்றி உழைப்பீர்கள். குடும்பத்தேவை பூர்த்தியாகும்.
கன்னி
கேது, சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டு. சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
உத்திரம் 2,3,4: பெண்களுக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கும். புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாருக்கு நீண்ட நாளாக இருந்த பிரச்னைகளை சரிசெய்வீர்கள். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அஸ்தம்: குடும்பத் தலைவரின் தியாகத்தால் நன்மை நிகழும். கடினமான வேலைகளை கூட மிகுந்த முயற்சியால் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். பொறாமைகளை தவிர்க்க இயலாது.
சித்திரை 1,2: உறவினருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீடிக்கும். சொத்துகளைக் கவனமாக கையாள்வீர்கள். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
சந்திராஷ்டமம்: 22.1.2021 காலை 6:00 - நள்ளிரவு 2:13 மணி
துலாம்
சுக்கிரன், புதன், சந்திரன் பல நல்ல பலனைத் தருவர். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.
சித்திரை 3,4: சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். முக்கிய ஆவணங்களை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். உணவுப் பழக்கத்தில் சில மாறுதல்களைச் செய்ய வேண்டியிருக்கும். சேமிப்பு பணம் பயன்படும்.
சுவாதி: எந்த சந்தர்ப்பத்திலும் கவனமாக செயல்படுங்கள். உங்களை மதித்துப் போற்றும் நல்லவர்களைப் பகைக்க வேண்டாம். பிறர் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.
விசாகம் 1,2,3: அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பீர்கள். இருந்தாலும் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். வார்த்தைகளை கவனமின்றி உதிர்த்துவிட வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 22.1.2021 நள்ளிரவு 2:14 - 25.1.2021 மதியம் 1:13 மணி
விருச்சிகம்
சனி, புதன், சந்திரன் நன்மைகளை அள்ளி வழங்குவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
விசாகம் 4: குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய அவசியம் நேரும். பிள்ளைகளை அளவுடன் மட்டுமே கண்டியுங்கள். அலைச்சலுக்கு பிறகே எதுவும் நிகழும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.
அனுஷம்: பூர்வீக சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். வார மத்தியில் ஏற்படும் சிரமம் வாரக்கடையில் தீரும். சிறியவர்களுக்கும் உரிய மதிப்புக் கொடுப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
கேட்டை: பணியாளர்கள் அலுவலக விஷயங்களில் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நல்லது. பிறரது ஆலோசனை இல்லாமல் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.
சந்திராஷ்டமம்: 25.1.2021 மதியம் 1:14 - 27.1.2021 இரவு 10:12 மணி
தனுசு
கேது, சூரியன், ராகு நற்பலன்கள் அளிப்பர். பைரவர் வழிபாடு நன்மை தரும்.
மூலம்: கடமைகளை முடிக்காமல் பொழுது போக்குகளில் ஈடுபடத் தோன்றும். கவனமுடன் செய்யாத எந்த விஷயமும் சிறு தொல்லைகளை தர வாய்ப்புள்ளது. புதிய திட்டங்களை செயல்படுத்தும்போது மிகுந்த கவனம் தேவை.
பூராடம்: நிபந்தனைகளை நன்கு அறிந்த பிறகே ஒப்பந்தங்களில் கையெழுத்திடுங்கள். பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் பிரச்னைகள் வராது. பணத்தின் அருமையை உணர்ந்து சேமிக்க ஆரம்பிப்பீர்கள்.
உத்திராடம் 1: வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணத்தை அடுத்த வாரத்துக்கு ஒத்திவையுங்கள். பிறரை மரியாதை குறைவாக பேசி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். தெய்வவழிபாடு நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: 27.1.2021 இரவு 10:13 மணி - 28.1.2021 நாள் முழுவதும்
மகரம்
புதன், கேது அனுகூல பலன்களை அளிப்பர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
உத்திராடம் 2,3,4: தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணவரவு அதிகரிப்பதால் சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகளால் மகிழ்ச்சி ஏற்படும். இனி நல்லதே நடக்கும். அனைத்து செயல்களையும் முனைப்புடன் முடிப்பீர்கள்.
திருவோணம்: சில விஷயங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைபிடித்தால் வெற்றி பெறலாம். கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. அக்கம் பக்கத்தினரிடம் அளவோடு பழகுவது நல்லது.
அவிட்டம் 1,2: பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை கடனாக வாங்குவது, கொடுப்பதை தவிர்க்கவும். தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் தொடரும். நண்பர்களிடம் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள்.
கும்பம்
சந்திரன், புதன், சுக்கிரன் சாதகமான பலன்களை வழங்குவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
அவிட்டம் 3,4: பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. பிறரது ஆலோசனைகளை ஏற்குமுன் அதுபற்றி பரிசீலிப்பது நல்லது. உடன்பிறந்தோர் மூலம் தேவையான உதவி கிடைக்கும். உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.
சதயம்: உணர்ச்சி வசப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்தை நீங்களே தீர்த்துவிடுவீர்கள். உயர்பதவியில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். மனதிற்கு நெருக்கமானவர்களை பற்றிய கவலை நீங்கும். உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை அதிகமாகும். கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.
மீனம்
புதன், சூரியன், குருவால் நற்பலன்கள் விளையும். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
பூரட்டாதி 4: கணவர் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சற்றும் எதிர்பாராத நன்மை ஒன்று வந்து சேரும். பிள்ளைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: அரசியல்வாதிகள் திறமையாக செயல்படுவர். பிறரது பாராட்டுகளை பெறுவீர்கள். விரும்பத்தகாத வாக்குவாதங்களில் இருந்து நாசூக்காக விலகுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
ரேவதி: குடும்பத்தில் உள்ள ஒருவர் பெருமைப்படத்தக்க செயலை செய்வார். அலுவலகத்தில் உங்கள் மீது பிறர் வைத்திருந்த அலட்சியம் நீங்கும். உங்களின் செல்வாக்கு எல்லா இடத்திலும் பயன்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE