பொது செய்தி

இந்தியா

சீனாவை தடுங்கள் விவசாயிகளை விடுங்கள் : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஜன 22, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
புதுடில்லி : எல்லையில் சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது, அதை தடுக்காமல் நாட்டிற்குள் போராடும் விவசாயிகளை தடுக்க பார்க்கிறது மத்திய அரசு என கூறி #StopChinaNotFarmers என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் இன்று(ஜன., 22) டிரெண்ட் ஆனது.விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து 50 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு
StopChinaNotFarmers, Farmersprotest, China, Arunachalpradesh,

புதுடில்லி : எல்லையில் சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது, அதை தடுக்காமல் நாட்டிற்குள் போராடும் விவசாயிகளை தடுக்க பார்க்கிறது மத்திய அரசு என கூறி #StopChinaNotFarmers என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் இன்று(ஜன., 22) டிரெண்ட் ஆனது.

விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து 50 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. இதனால் நாளுக்கு நாள் அவர்களது போராட்டம் வலுத்து கொண்டே போகிறது. அடுத்தப்படியாக வருகிற குடியரசு தினத்தில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் நாடு முழுக்க இருந்து பலரும் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை முறியடிக்கவும், எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் இருக்க பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் இதை தடுக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news




இது ஒருபுறம் இருக்க எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. அருணாச்சல் பிரதேசத்தின் எல்லையில், ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கி வருகிறது. அங்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திபெத்தின் ஒரு பகுதி என, சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் அங்கு கட்டுமானம் மேற்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை சுட்டிக்காட்டி டுவிட்டர் தளவாசிகள் இன்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அதாவது எல்லையில் சீனா மெல்ல இந்தியாவை ஆக்கிரமித்து வருகிறது. இதை தடுக்காமல் நாட்டில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு. ஆகவே சீனாவை தடுங்கள் விவசாயிகளை அல்ல என கூறி #StopChinaNotFarmers என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.


latest tamil news




''உண்மையான எதிரிகள் யார் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நமது விவசாயிகளை களங்கப்படுத்துவதை நிறுத்த வேண்டும்''. ''நமது பிராந்தியத்தில் சீனாவால் உருவாக்கப்பட்ட மோடியின் ஸ்மார்ட் கிராமம்''. ''லடாக் மற்றும் அருணாச்சலுக்குள் சீனா நுழைந்துள்ளது. இன்று வரை சீனா என்ற வார்த்தையை கூட மோடி உச்சரிக்கவில்லை. ஆனால் விவசாயிகளுடன் சண்டையிட்டு டில்லியில் அவர்கள் நுழைவதை பா.ஜ., அரசு தடுக்கிறது''. என பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatai - Tiruchirappalli,இந்தியா
24-ஜன-202115:30:26 IST Report Abuse
Venkatai இந்த ட்ரெண்டிலும் விஷமிகளே இருப்பது தெளிவு. விவசாய தலைவர்களிடம் உண்மை நேர்மை இருந்தால் எந்தநியாயமான அணுகுமுறையையும் ஏற்காமல் சட்டம் வாபஸ் குடியரசுதின பேரணி தங்கள் இஷ்டப்பட்ட வழி என விடாப்பிடி இருக்காது. பின்புல அரசியல் பணமுதலை தவறாக விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டம் தெரிகிறது. வாராதுபோலவந்த ஒரு நல்லது செய்யும் நேர்மை ஆட்சியை அழிக்க முயலும் தவறானவர்கள் முடக்கப்பட்டேயாக வேண்டும். நீலிக்கண்ணீர் வஞ்சகர் கோட்டைஉடைக்கப்பட்டு சிறைபட்ட விவசாயிகள் மீட்கப்பட்டேயாக வேண்டும். அரசியல் சதிகள் வெல்லப்பட்டேயாகவேண்டும். பலகால அவலங்கள் புலம்பல்கள் களையப்பட வேடதாரிகள் நசுக்கப்பட்டேயாக வேண்டும். இதற்கும் சீன ஆக்கிரமிப்பு அட்டகாசத்திற்கும் என்ன சம்பந்தம். எப்போதுமில்லாமல் இப்போதுதானே சீனாதட்டிக்கேட்கப்பட்டு தடுக்கப்பட்டு உலக அரங்கிலேயே அடையாளம் காட்டப்பட்டுள்ளது. தவறான தகிடு தத்தத்தால் நாட்டைக் கெடுத்த கோடாறிகள் தவறான வழியில் நாட்டைவிற்று தன்னைவளர்த்துக்கொண்டவர்கள் உழைத்துவராத பணத்தை இறைத்து உண்மை நேர்மையை வீழ்த்த முயல்வது வெளிப்படைக தெரிகிறது. ஆத்திரத்தில் இருக்கிறார்கள் இந்தத்திமிங்கிலங்களுக்கு ஊர்குட்டை மீன்கள் பரிந்து போராடுவதுதான் பரிதாபகரமானது
Rate this:
Cancel
மக்குமக்கு - அரையூர்,இந்தியா
24-ஜன-202109:20:02 IST Report Abuse
மக்குமக்கு விவசாயிகள் முதலில் விவசாய சட்டத்தில் குறைந்த விலை உறுதி செய்யவேண்டும் சொல்லி போராட்டம் செய்தார்கள் . ஆதரவிலையில் மாற்றம் இல்லை அரசு சொன்னது. எழுத்து பூர்வமாக வேணும் என்று சொன்னது போராட்டம். கொடுக்கிறேன் சொன்னதும். புதிய வேளாண் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் சொன்னதும் மத்திய அரசு, நீதிமன்றம் குழு வைத்தது. அதையும் புறக்கணித்து சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் கூறினார்கள்.இப்போது ஒரு வருடம் நிறுத்தி வைக்கிறோம் சொல்லியோம் போராட்டம் தொடரும் என்றால் இதில் ஏதோ சதி உள்ளது. சீனா தெரிந்த எதிரி. சமாளித்து விடலாம். விவசாயத்தில் தெரியாத எதிரிகள் விவசாயிகள் போராட்டத்தில் உள்ளனர்.இந்தியாவில் பெரும்பான்மை விவசாய சங்கம் ஆதரிக்கும் போது இவர்கள் போராட்டம் ஒடுக்க்கபடவெண்டும். இதே சீனாவில் நடந்தால் விவசாயிகளின் கதி என்ன ஆகும் சிந்தித்து பாருங்கள்.
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
23-ஜன-202108:43:08 IST Report Abuse
natarajan s டெல்லியில் போராடுபவர்கள் எல்லோரும் விவசாயிகள் என்று கூற முடியுமா ? அருணாச்சல விவகாரம் 1913 ஆம் ஆண்டில் இருந்தே உள்ளது.அதை ராணுவம் பார்த்து கொள்ளும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X