புதுடில்லி : விவசாயிகளுடன் இன்று நடந்த 11வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள், டில்லி எல்லையில், 57 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு தீர்வு காண, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன்,மத்திய அரசு 10 சுற்று பேச்சு நடத்தியும் பலனில்லை.
இந்நிலையில், 11வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடந்தது. இந்த கூட்டத்திலும் எந்த உடன்பாடும் எட்டப்படாததை தொடர்ந்து, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கூட்டத்தில் பேசிய வேளாண் அமைச்சர் தோமர், விவசாயிகள் ஒத்துழைப்பு அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், விவசாயிகளுக்கு மதிப்பு தெரிவித்து சட்டத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். சட்டத்தை நிறுத்தி வைக்கும் திட்டத்தை விவசாயிகள் ஏற்று கொண்டால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், உணவு இடைவேளைக்கு முன்னர், சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அரசு தரப்பில் சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசின் திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும் என அமைச்சர் கூறியதற்கு, எங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என நாங்கள் கூறினோர்.
பின்னர், கூட்டத்தில் இருந்து அமைச்சர் வெளியேறினார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நாங்கள் காத்திருந்தும் அமைச்சர் வரவில்லை. இது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி. எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என தெரிவித்தார். திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி வரும் 26ல் நடக்கும் என தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE