அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஜன 22, 2021
Share
அறிவியல் ஆயிரம்சிறுவர்களுக்கு தடுப்பூசி இந்தியாவில் 'கோவிஷீல்டு', 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது 18 வயதுக்கு கீழ் வழங்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 'சொட்டு மருந்து' போல மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றதாக இருக்கும். அரை மணி நேரத்தில் ஒரு வகுப்பறையின் அனைவருக்கும் செலுத்தி விடலாம் என

அறிவியல் ஆயிரம்
சிறுவர்களுக்கு தடுப்பூசி

இந்தியாவில் 'கோவிஷீல்டு', 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது 18 வயதுக்கு கீழ் வழங்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு 'சொட்டு மருந்து' போல மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து ஏற்றதாக இருக்கும். அரை மணி நேரத்தில் ஒரு வகுப்பறையின் அனைவருக்கும் செலுத்தி விடலாம் என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலிரியா தெரிவித்து உள்ளார். சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு என்றாலும், அவர்கள் மூலமாக பெற்றோர் உட்பட மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம்.

தகவல் சுரங்கம்
நீண்டகால நீதிபதி

இந்தியாவில் 1950ல் இருந்து இதுவரை 47 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர். முதல் தலைமை நீதிபதியாக எச்.ஜே.கனியா பதவி வகித்தார். இதில் நீண்டகாலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் 16வது தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட். இவர் 22.2.1978 முதல் 11.7.1985 வரை (2696 நாட்கள்) பதவி வகித்தார். இவருக்கு அடுத்தபடியாக புவனேஷ்வர் பிரசாத் சின்ஹா (1583 நாட்கள்), ஏ.என்.ராய் (1372 நாட்கள்), சுதி ரஞ்சன்தாஸ் (1337 நாட்கள்) உள்ளனர். குறைந்த நாட்கள் பதவி வகித்தவர் கமல் நரைன் சிங் (17 நாட்கள்).

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X