புது டில்லி: சர்வதேச மருத்துவ இதழான லான்செட், இந்திய தயாரிப்பான கோவேக்சின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாகவும், கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் அதில் கண்டறியப்படவில்லை என்று தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
![]()
|
பாரத் பையோடெக்கின் முதல் கட்ட பரிசோதனையின் போது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஜூலை 13 முதல் 30 வரை சுமார் 375 பங்கேற்பாளர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அந்த சமயத்தில் தினசரி நோய் தொற்று பாதிப்பு தீவிரமாக இருந்தது. இதனால் ஆய்வில் பங்கேற்றவர்கள் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்று லான்செட் கூறியுள்ளது. இந்த ஆய்விற்கு பாரத் பையோடெக் நிதி அளித்துள்ளது. இருப்பினும் தகவல்கள் சேகரிப்பு, அதனை பகுப்பாய்வு செய்வது, அறிக்கை எழுதுவது போன்ற எதிலும் அந்நிறுவனத்தின் பங்கு இல்லை என்று லான்செட் கூறியுள்ளது.
இந்தியா முழுவதும் 11 மருத்துவமனைகளில் இந்த சோதனை நடைபெற்றது. தடுப்பூசி பெற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை 14 நாட்கள் இடைவெளியில் கண்காணித்தனர். பங்கேற்பாளர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்குமே மேம்பட்ட நோயெதிர்ப்பு சக்தி உண்டானதாக தெரிவிக்கின்றனர். பக்கவிளைவுகளை மதிப்பிடுவதற்காக பரிசோதனைக்கு பின்னர் பங்கேற்பாளர்கள் 2 மணி நேரம் கவனிக்கப்பட்டுள்ளனர்.
![]()
|
மேலும் தலைவலி, பார்வை மங்குதல் அல்லது தடுப்பூசி போட்ட இடத்தில் மாற்றம் ஏதேனும் ஏற்படுகிறதா என்று 7 நாட்களுக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளனர். அதன் படி அனைத்து குழுக்களிலும் 14 முதல் 21% பேருக்கு பக்கவிளைவுகள் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியளவிலான பாதக நிகழ்வுகள் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement