பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜன 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜன., 23, 1967சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்ற சிற்றுாரில், 1890 மே, 19ல் பிறந்தவர், ராமானுஜ ஐயங்கார்.புதுக்கோட்டை மலையப்பா ஐயர், நாமக்கல் நரசிம்ம ஐயங்கார், பூச்சி சீனிவாச ஐயங்கார் ஆகியோரிடம் இசை பயின்றார். 1918ல், திருவையாறு தியாகராஜ ஆராதனையில், தன் முதல் கச்சேரியை நிகழ்த்தினார்.இசைக் கச்சேரியில், 'அரியக்குடி பாணி' என, ஒரு பாணியை வகுத்தார்.
 
இதே நாளில் அன்று


ஜன., 23, 1967



சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்ற சிற்றுாரில், 1890 மே, 19ல் பிறந்தவர், ராமானுஜ ஐயங்கார்.புதுக்கோட்டை மலையப்பா ஐயர், நாமக்கல் நரசிம்ம ஐயங்கார், பூச்சி சீனிவாச ஐயங்கார் ஆகியோரிடம் இசை பயின்றார். 1918ல், திருவையாறு தியாகராஜ ஆராதனையில், தன் முதல் கச்சேரியை நிகழ்த்தினார்.இசைக் கச்சேரியில், 'அரியக்குடி பாணி' என, ஒரு பாணியை வகுத்தார். இப்போதைய, கர்நாடக இசைக் கச்சேரிகளின் பத்ததி என்ற வடிவமைப்பை ஏற்படுத்தியவரும், இவர் தான். ஒரு புகழ்பெற்ற சங்கீத பரம்பரையை உருவாக்கிய பெருமையும், இவரை சேரும்.மத்திய அரசின், 'பத்ம பூஷன்' உட்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். இசையுலகில் பெரும் சாதனை படைத்தவர், 1967 ஜன., 23ல், தன், 77வது வயதில் காற்றில் கலந்தார்.கர்நாடக இசைக் கலைஞர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijaya Raghav - chennai,இந்தியா
23-ஜன-202111:56:05 IST Report Abuse
Vijaya Raghav அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X