கிரிக்கெட் வெற்றியிலிருந்து உத்வேகம்: மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (11+ 50)
Share
Advertisement
புதுடில்லி :''ஆஸ்திரேலியாவில், இளம் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதை முன் உதாரணமாக கருதி, மாணவர்கள் உத்வேகம் பெற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நம்பிக்கைஅசாம் மாநிலம், தேஜ்பூர் பல்கலையில் பட்டப் படிப்பு முடித்த மாணவர்களிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது: கொரோனா தொற்றின் துவக்க காலத்தில், என்ன
Cricket, PM Modi, Ind vs Aus, கிரிக்கெட், வெற்றி, உத்வேகம், மாணவர்கள், பிரதமர், அறிவுரை

புதுடில்லி :''ஆஸ்திரேலியாவில், இளம் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதை முன் உதாரணமாக கருதி, மாணவர்கள் உத்வேகம் பெற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


நம்பிக்கை


அசாம் மாநிலம், தேஜ்பூர் பல்கலையில் பட்டப் படிப்பு முடித்த மாணவர்களிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது: கொரோனா தொற்றின் துவக்க காலத்தில், என்ன நடக்கும் என பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால், தொற்றில் இருந்து, நம் நாடு விரைவாக மீண்டது.

'மேட் இன் இந்தியா' திட்டத்தில் கிடைத்த தீர்வுகள் வாயிலாக, கொரோனாவை எதிர்த்து போராடினோம். நம் நம்பிக்கைக்கு ஏற்ப, விஞ்ஞானிகள் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். நம் நாட்டு இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. நேர்மறையான முடிவுகள் கிடைக்க, நமக்கு நேர்மையான எண்ணங்கள் அவசியம்; அதுவே, தற்சார்பு இந்தியாவிற்கு அவசியம்.

நம் மனதை நேர்மறையாக மாற்றுவதற்கு, ஆஸ்திரேலியாவில் பல்வேறு சவால்களை சந்தித்து, இந்திய கிரிக்கெட் அணி பெற்ற வெற்றி, மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்ததால், பல்வேறு சவாலுக்கு மத்தியில், இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.


பெரிய பாடம்


குறைந்த அனுபவமே உடைய இளம் வீரர்கள் இருந்த போதும், நம்பிக்கையுடன் விளையாடி, சாதனை படைத்தது. இந்திய அணியின் வெற்றி, நமக்கு கிடைத்த பெரிய பாடம். இதை முன் உதாரணமாக கருதி, இதில் இருந்து உத்வேகம் பெற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


'வதந்தி பரப்ப வேண்டாம்'


உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திய மருத்துவ பணியாளர்களுடன், பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் வழியாக கலந்துரையாடினார். பயனாளிகள், தடுப்பூசி குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். தடுப்பூசியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என, அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது: உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் திட்டம், நம் நாட்டில் நடந்து வருகிறது. இந்த புத்தாண்டு, நமக்கு புதிய நம்பிக்கைகளுடன் துவங்கியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தடுப்பூசி சென்றடைகிறது. உலக நாடுகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும், நாம் வழங்கி வருகிறோம். கொரோனா தடுப்பூசி பற்றி, சிலர் தேவையில்லாமல் வதந்தி பரப்புகின்றனர். தடுப்பூசி சிறப்பாக பயனளிப்பதாக, அதில் பயனடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11+ 50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
23-ஜன-202115:33:08 IST Report Abuse
ஜெயந்தன் ஹ்ம் ..இன்னும் மூணு வருடங்களுக்கு இப்படியே தினம் ஒரு வடை சுட்டாக வேண்டும்...நாமும் அதை ருசிக்க வேண்டும்... வேற வழி...
Rate this:
Cancel
Naresh Giridhar - Chennai,இந்தியா
23-ஜன-202115:22:26 IST Report Abuse
Naresh Giridhar இவருக்கு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதிலேயே காலம் செலவாகிறது . எவன் கேக்கிறான் ?
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
23-ஜன-202113:26:29 IST Report Abuse
மனிதன் தேவையில்லாததையெல்லாம் பேசுவாரு... சாமி, அந்த அர்னாப் கோ ஸ்வாமியை பத்தி பேசுங்களேன்...புல்வாமாதாக்குதலை பத்தி, பத்திபத்தியா பேசுனீங்களே...இப்போ பேசுங்களேன் கேப்போம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X