அரசியல் செய்தி

தமிழ்நாடு

துரோகத்திற்கு விலைபோகி விடாதீர்: பழனிசாமி வேண்டுகோள்!

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
சென்னை: 'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிதான். எனவே, யாரும் துரோகத்திற்கு விலை போய்விட வேண்டாம்' என, அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன், தலைமை வகித்தார்.
ADMK, Edappadi Palanisamy, Tamil Nadu Chief Minister

சென்னை: 'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிதான். எனவே, யாரும் துரோகத்திற்கு விலை போய்விட வேண்டாம்' என, அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன், தலைமை வகித்தார். கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ்., - இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., - அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் பங்கேற்றனர். வேறு யாரும் கூட்டம் நடத்த அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை.

கூட்டம் துவங்கியதும், 'வரும், 27ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட உள்ளது. இதை பிரமாண்டமாக நடத்த வேண்டும். இது தொடர்பாக, ஆலோசனைகள் கூற விரும்புவோர் தெரிவிக்கலாம்' என்று, முதல்வர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், சிலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து பேசிய முதல்வரும், துணை முதல்வரும், 'ஜெ., நினைவிடம் திறப்புக்கு, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், கட்சியினரை அழைத்து வர வேண்டும்; பெண்கள் அதிகம் வர வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.

மேலும், 'சட்டசபை தேர்தல் பணிகளை விரைவுப்படுத்துங்கள். அரசின் திட்டங்களை, மக்களிடம் எடுத்து செல்லுங்கள்' என அறிவுறுத்தி உள்ளனர். அதன்பின், தேர்தல் பணிகள் குறித்து, மாவட்ட நிர்வாகிகளிடம், தனித்தனியே ஆலோசித்துள்ளனர். அப்போது, தென் மாவட்ட செயலர் ஒருவர், 'தேர்தலில் தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. இது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என, தெரிவித்துள்ளார்.

அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர், ''எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். யாரும் துரோகத்திற்கு விலை போய்விட வேண்டாம். அனைவரும் வெற்றி மட்டும் இலக்காகக் கொண்டு செயல்படுங்கள். அடுத்து மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிதான். அதை மனதில் வைத்து பணியாற்றுங்கள்,'' எனக் கூறியுள்ளார்.


சூரியமூர்த்திக்கு பதவி


அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலராக, முன்னாள் அரசு ஊழியர் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வர் மற்றும் துணை முதல்வரை, நேற்று கட்சி அலுவலகத்தில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugu.N - cairo,எகிப்து
29-ஜன-202109:44:58 IST Report Abuse
murugu.N திமுக சொம்புகள் துணை முத்தாழ்வாரை கொம்பு சீவி விட்டு அண்ணாதிமுக கட்சி உடைந்தால் திமுக வெற்றி பெறலாம் என்று சிலர் கருத்துக்களை எழுதுகிறார்கள்.ஆனால் துணைமுதல்வர் ஆனார்கள் பதவிக்காக தாய் கட்சியை விட்டு விட்டு ஒரு நாளும் போக மாட்டார் அது போலத்தான் முதல்வரும் துணைமுதலவரை விட்டு விட்டு தனியாக இருக்க மாட்டார்கள். அவர்கள் இருவரும் அம்மாவின் செல்ல பிள்ளைகள்.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
23-ஜன-202115:49:47 IST Report Abuse
periasamy இப்போது அதிகாரம், வருமானம் தடைபட கூடாது என்பதால் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர் அதன் பிறகு கோகிலா இந்திரா அவர்களைப்போல் துணிந்து விடுவார்கள் இந்த இடப்படியும் பன்னீரும் யாரையும் கட்டுப் படுத்த முடியாது கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்தாகக் கூட கட்சி பிளவு படுவது உறுதி
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
23-ஜன-202115:43:53 IST Report Abuse
periasamy தேர்தல் நேரத்தில் ஒரு இலையை சசிகலாவும்+பன்னீரும் = மற்றதை எடப்பாடியும் பிச்சு எடுப்பார்கள் இதுதான் நடக்கும் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இப்போது வருமானமும் அதிகாரமும் வேண்டும் என்பதால் அனைவரும் அடக்கி வசிக்கிறார்கள் அதன் பிறகு அனைவரும் எடப்பாடி ரேஞ்சு பேசுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X