அரசியல் செய்தி

தமிழ்நாடு

விரைவில் முக்கிய அறிவிப்பு: ஸ்டாலின்

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை :''சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் ஒற்றை இலக்குடன், அடுத்த கட்ட பிரசாரத்திற்கு தொண்டர்கள் தயாராக வேண்டும். விரைவில், முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க., தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்: 'மக்கள் நம் பக்கம்; நாம் மக்கள் பக்கம்' என்பதை, இந்த மக்கள் கிராம சபை கூட்டங்கள்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை :''சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் ஒற்றை இலக்குடன், அடுத்த கட்ட பிரசாரத்திற்கு தொண்டர்கள் தயாராக வேண்டும். விரைவில், முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., தொண்டர்களுக்கு, ஸ்டாலின் எழுதிய கடிதம்: 'மக்கள் நம் பக்கம்; நாம் மக்கள் பக்கம்' என்பதை, இந்த மக்கள் கிராம சபை கூட்டங்கள் மெய்ப்பித்துள்ளன.திருத்தணி, மதுரவாயல் தொகுதிகளில் இன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டங்களில், மக்களை சந்திக்கிறேன். அத்துடன், மக்கள் கிராம சபை கூட்டங்கள் நிறைவடைகின்றன.

மக்களுடனான கட்சியின் சந்திப்பும், கட்சியுடனான மக்களின் பேரன்பும் எல்லையின்றி தொடர்கின்றன. தொண்டர்களில் ஒருவனான நான், விரைவில் அடுத்த கட்ட பிரசாரம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். தேர்தலில், 200 தொகுதிகளுக்கு குறையாத, இணையில்லா வெற்றியைக் குவித்து, அதை கருணாநிதியின் நினைவிடத்தில் காணிக்கை யாக்கிடும் ஒற்றை இலக்குடன், அடுத்த கட்ட பிரசாரத்திற்கு தொண்டர்கள் தயாராக வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


சென்னை, கொளத்துார் தொகுதியை, ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். வார்டு 65, சீனிவாச நகர்மூன்றாவது தெருவில், திறந்தவெளி நிலத்தில், சிறுவர் பூங்கா உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கும் பணிக்கு, ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பள்ளி மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
24-ஜன-202100:16:03 IST Report Abuse
Mohan AB SIR, ILAVU KAATHA KILI ELAVUKKAGA KAATHIRUKKU.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
23-ஜன-202120:53:52 IST Report Abuse
sankar வாய்ப்பே இல்லை ராசா
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
23-ஜன-202118:26:47 IST Report Abuse
Anand நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வீட்டிற்கு ஒரு பணம் அச்சடிக்கும் எந்திரம் கொடுக்கப்படும், தேவையான பணத்தை அவர்களே அடித்துக்கொள்ளலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X