சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிர்ச்சி: பட்டபகலில் ரூ.10 கோடி நகை கொள்ளை

Updated : ஜன 24, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில் முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் நேற்று பட்டபகலில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம கும்பல் ஊழியர்களை தாக்கி கட்டிப் போட்டது. பின் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலுார் சாலையில் வாடகை கட்டடத்தில் 10
அதிர்ச்சி, நகை கொள்ளை, ஓசூர், முத்தூட் பைனான்ஸ், முத்துாட் பைனான்ஸ், பைனான்ஸ், நகை கொள்ளை

ஓசூர்: ஓசூரில் முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் நேற்று பட்டபகலில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம கும்பல் ஊழியர்களை தாக்கி கட்டிப் போட்டது. பின் 10 கோடி ரூபாய் மதிப்பிலான
தங்க நகைகள், 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலுார் சாலையில் வாடகை கட்டடத்தில் 10 ஆண்டுகளாக முத்துாட் பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியைச் சேர்ந்த சீனிவாச ராகவா 28 மேலாளராக உள்ளார்.இந்த நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். நகைகள் அனைத்தும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு ஊழியர்கள் நிறுவனத்தை திறந்தனர்.

அப்போது அங்கு வாடிக்கையாளர் போல் வந்த ஆறு பேர் துப்பாக்கிகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மேலாளர் சீனிவாச ராகவா, ஊழியர்கள் மாருதி 24, பிரசாத் 29, காவலாளி ராஜேந்திரன் 55, ஆகியோரை தாக்கி கை, கால்கள் மற்றும் வாயை துணியால் கட்டி போட்டனர்.
தொடர்ந்து ஊழியர்களிடம் இருந்த சாவியை பறித்து லாக்கரில் இருந்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள் மற்றும் 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து பைக்கில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. கொள்ளை கும்பலில் நான்கு பேர் முக கவசமும், இருவர் ஹெல்மெட்டும் அணிந்திருந்தனர். ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

எஸ்.பி. பண்டி கங்காதர் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்வையிட்டு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். மோப்ப நாய் பைரவி சிறிது துாரம் ஓடி யாரையும் பிடிக்கவில்லை.
கர்நாடக மாநிலத்தில் இது போன்ற நிதி நிறுவன கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளதால் அங்கு கொள்ளையடித்த கும்பல் இங்கும் கைவரிசை காட்டியதா என போலீசார் விசாரிக்கின்றனர். 10 கோடி ரூபாய் தங்க நகை லாக்கரில் இருந்த போதும் காவலாளி ராஜேந்திரனிடம் துப்பாக்கி இல்லை. அதனால் தான் பட்டபகலில் சர்வசாதாரணமாக கொள்ளை சம்பவத்தை கும்பல் அரங்கேற்றியுள்ளது.


வாடிக்கையாளர்கள் முற்றுகைகொள்ளை சம்பவத்தை அறிந்த வாடிக்கையாளர்கள் தங்களது நகை கிடைக்குமா கிடைக்காதா என்ற கவலையில் பைனான்ஸ் நிறுவனம் முன் திரண்டனர். நிறுவனத்தினரும் போலீசாரும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பாகலுார் சாலையில் கொள்ளை சம்பவம் நடந்தது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


அரங்கேறியது எப்படி* நேற்று காலை 9:30 மணிக்கு முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்த கும்பல் ஊழியர்களை தாக்கி கட்டி வைத்து 40 நிமிடங்களில் நகைகளை கொள்ளையடித்து 10:10 மணிக்கு அங்கிருந்து தப்பிச் சென்றது.

* நிறுவனத்தில் இருந்த மூன்று லாக்கரில் ஒரு லாக்கரை மட்டும் திறந்து அதில் இருந்த நகைகளை மர்ம கும்பல் கொள்ளை அடித்துள்ளது. மீதமுள்ள லாக்கரில் இருந்த பணம் நகைகளை எடுப்பதற்குள் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அவசர அவசரமாக தப்பிச் சென்றுள்ளது
* இரண்டு அல்லது மூன்று பைக்குகளில் மர்ம கும்பல் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது
* சம்பவத்தை அரங்கேற்றும் முன் நிறுவனத்தை பல நாட்கள் நோட்டமிட்டு தப்பிச் செல்வதற்கான அனைத்து வழிகளையும் அறிந்த பின் தான் கொள்ளையை அரங்கேற்றியுள்ளது
* முத்துாட் பைனான்ஸ் நிறுவனம் முதல் தளத்தில் இயங்கி வருகிறது. பாகலுார் சாலையில் இருந்து பார்த்தால் நிறுவனத்தின் போர்டு மட்டுமே காட்சியளிக்கும். அதனால் கொள்ளை கும்பல் நிறுவனத்திற்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை.
* கொள்ளை கும்பல் லாக்கரை திறந்து நகைகளை கொள்ளையடித்த போது அலாரம் அடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பாகலுார் சாலை போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடம் என்பதால் அலாரம் சத்தம் மக்களுக்கு கேட்கவில்லை.
சம்பவம் தெரிந்தது எப்படிகாலை 10:00 மணிக்கு மர்ம கும்பல் சென்ற பின் நிறுவன ஊழியர் மாருதி கை கால் கட்டுகளை கஷ்டப்பட்டு அவிழ்த்து வெளியே வந்த பின்தான் கொள்ளை நடந்தது மற்றவர்களுக்கு தெரிந்தது.


அலைபேசி மீட்புகொள்ளை அடிக்கப்பட்ட நகைகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட நகை இருப்பதாகவும் அதன் மூலம் கிடைக்கும் சிக்னலை வைத்து போலீசார் தேடி வருவதாகவும் முதலில் தகவல் பரவியது. ஆனால் போலீசார் மறுத்தனர்.கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை நிறுவனத்தில் இருந்த மூன்று பெரிய பைகளில் கொள்ளை கும்பல் எடுத்து சென்றுள்ளது. அந்த பைகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி - ஆனைக்கல் சாலையில் கர்ப்பூரா பகுதி சாலையோரம் சிக்னல் காட்டுவது போலீசாருக்கு தெரிந்தது. கர்நாடகா போலீசார் உதவியுடன் ஓசூர் டி.எஸ்.பி. முரளி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தேடினர்.சிக்னல் காட்டிய பகுதியில் இருந்த முட்புதரில் இருந்து அலைபேசி ஒன்று மீட்கப்பட்டது. அது கொள்ளை கும்பல் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொள்ளையடித்த நகைகளை போலீசாருக்கு பயந்து எங்காவது புதைத்து வைத்துள்ளனரா அல்லது முட்புதரில் வீசி சென்றுள்ளனரா என இரவு வரை தேடினர்.


கிருஷ்ணகிரியை குறிவைக்கும் கும்பல்கடந்த 2014 செப். துாத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு 1.52 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பர் பிளேட்களை ஏற்றிச் சென்ற லாரியை ஓசூர் அருகே மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்திய கும்பல் டிரைவர்கள் இருவரை கொலை செய்து கடத்திச் சென்றது.கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி ராமாபுரத்தில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கிக்குள் 2015 ஜனவரி 23 நள்ளிரவு புகுந்த வட மாநில கும்பல் வங்கி லாக்கரில் இருந்த 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 48 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றது.கடந்த ஆண்டு அக்டோபர் 21 அதிகாலை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான அலைபேசிகளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி கடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் மத்திய பிரதேச கும்பல் கைதானது.


விரைவில் குற்றவாளிகள் கைதுகொள்ளை கும்பலை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்திற்கு ஒரு தனிப்படை சென்றுள்ளது. கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம்.வட மாநில கொள்ளை கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டதா என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் கொள்ளை கும்பல் ஹிந்தியில் பேசியதாக தாக்கப்பட்டவர்கள் கூறினர்.விசாரணையில் தான் தெளிவாக தெரியும்.பண்டி கங்காதர்எஸ்.பி.,


வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம்''ஓசூரில், கொள்ளை போன நகைகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன' என, முத்துாட் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓசூர் - பாகலுார் சாலையில் உள்ள, முத்துாட் பைனான்ஸ் நிறுவனத்தில், துரதிர்ஷ்டவசமாக கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக, விசாரிக்கும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கியுள்ளோம்.

குற்றவாளிகள் கைது செய்யப்படுவது உறுதி. நகைகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாமல் பாதுகாப்போம். காயமடைந்த எங்கள் கிளை ஊழியர்கள் அனைவருக்கும், தேவையான உதவிகளை செய்வோம். ஓசூர் - பாகலுார் கிளை, தற்காலிகமாக மூடப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜன-202114:21:26 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) உண்மை குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் , அப்போது யூகங்கள் எல்லாம் சரியும்.
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
23-ஜன-202113:08:42 IST Report Abuse
ram கொள்ளை அடிப்பவரிடம் இருந்து கொள்ளை
Rate this:
Cancel
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் - தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை” ,இஸ்ல் ஆப் மேன்
23-ஜன-202112:23:01 IST Report Abuse
வெற்றி நமதே: தடுப்பூசி போட்டுக் கொள்வோம் நேற்று அபிராம புறத்தில் ஒரு பெண்ணிடம் செய்யின் பறிப்பு , muthoot இல் இப்படி ஒரு வேலை பழனியிடம் அதிக தொகுதி கேட்க சிங்கி கூட்டம் சேயும் சேட்டைகளோ , ஏன் எனில் வட நாட்டில் நடப்பது போலவே ACTION இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X