திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், தைப்பூச தெப்போற்சவம் நடத்த வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கு இருப்பதால், பக்தர்கள் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு, சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட விழா நடத்த, தடை விதிக்கப்பட்டு உள்ளது.பொய்கை குளம்ஆண்டுதோறும், தை மாதத்தில், தைப்பூச தெப்போற்சவம், இக்கோவில் சரவண பொய்கை குளத்தில், விசேஷமாக நடைபெறும்.ஆனால், வரும், 28ம் தேதி தைப்பூச தெப்போற்சவம் நடைபெறுவதற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை. இதனால், தெப்ப உற்சவம் நடக்குமா என, பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சக்திதரன் கூறியதாவது:கந்தசுவாமி பெருமான் மாடவீதிகளில் வீதி உலா வந்து, ஓராண்டு ஆகப்போகிறது. வரும் தைப்பூசம் அன்று, சுவாமி வெளியே வருவார் என, ஆவலாக உள்ளோம்.முதல்வர் பிரசாரத்தின்போது கூடிய கூட்டத்தைவிட தெப்போற்சவத்தை காண்போர் குறைவாகத்தான் இருப்பர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சில கோவில்களில், பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று, கோவில் நிர்வாகம் முன்வந்து, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, விழா நடத்துகிறது.கிருத்திகை விழாஅதுபோல், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, தெப்போற்சவத்தை நடத்த கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும். முனைப்புடன் செயல்பட்டு, விழாவை நடத்த, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
இதுவே அனைவரின் எதிர்பார்ப்பு.இவ்வாறு, அவர் கூறினார்.கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, 'கொரோனா பாதுகாப்பு காரணமாக, இந்தாண்டு தெப்பம் விழா கிடையாது. கிருத்திகை விழாவிற்கு வருவதுபோல், பக்தர்கள் தரிசனம் மட்டும் செய்யலாம்' எனக் கூறியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE