ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரூ.150 கோடி அகஸ்தீஸ்வரர் கோவில் நிலம் மீட்பு

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 22, 2021 | கருத்துகள் (49) | |
Advertisement
சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம், அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிரவுண்டு நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.சென்னை, நுங்கம்பாக்கம், மேற்குமாட வீதியில் அமைந்துள்ளது, அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில். கடந்த, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், பல
ஆக்கிரமிப்பு, அகஸ்தீஸ்வரர் கோவில், நிலம், மீட்பு

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம், அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 150 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 கிரவுண்டு நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

சென்னை, நுங்கம்பாக்கம், மேற்குமாட வீதியில் அமைந்துள்ளது, அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவில். கடந்த, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலுக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், பல ஏக்கர் நிலங்கள், கட்டடங்கள் உள்ளன.நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் சாலையில் உள்ள, 15 கிரவுண்ட் நிலத்தை, 30 ஆண்டுகளாக, சீனிவாசன், மோகனா என்பவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

அந்த இடத்தில், பல குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர். இது தொடர்பாக, அறநிலையத்துறை இணை கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்பை அகற்றி கையகப்படுத்த உத்தரவிடப்பட்டது.


நுங்கம்பாக்கத்தில் 150 கோடி ரூபாய் கோயில் நிலம் மீட்பு | அகத்தீஸ்வரர் கோயில்

latest tamil news




இதையடுத்து, அறநிலையத்துறை சட்டப் பிரிவு, 78ன் படி, சென்னை மண்டல இணைக் கமிஷனர் ஹரிபிரியா, உதவிக் கமிஷனர் கவேனிதா ஆகியோர், வருவாய் அலுவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில், நேற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றியதோடு, கட்டடத்தையும் கையகப்படுத்தி, 'சீல்' வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J BASKARAN - Tamilnadu,Chennai,இந்தியா
30-ஜன-202112:52:43 IST Report Abuse
J BASKARAN Om Namashivaya Hara Hara Mahadev, Thiruchittrambalam.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
24-ஜன-202115:58:19 IST Report Abuse
Sai இங்கே சிலர் அந்த சீனிவாசன், மோகனா என்பவர்கள் திருட்டு தீயமுகவினராகத்தான் இருப்பார்கள் என்று அடித்து சொல்வார்களே
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜன-202119:45:24 IST Report Abuse
madhavan rajanஉங்களுக்கே தெரிந்திருப்பதால் பிரச்சினையில்லை. ஆனால் உங்கள் கட்சி உண்மையை எப்போதும் ஒப்புக்கொண்டதில்லையே....
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
24-ஜன-202115:38:52 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN தேர்தல் வரும் நேரத்தில் செய்யும் ஸ்டண்ட் என்று பேர் வாங்காமல் , இது போல க்ளியர் சுட் கேஸ்கள் எல்லாவற்றிலும் செயல் பட்டு கிடப்பில் கிடக்கும் நடவடிக்கைகளை எல்லாம் ஒன்று விடாமல் மீண்டும் கையில் எடுத்து இன்னுமொரு மிகப் பெரிய மீட்பு வேலையை அந்த துறை செய்து முடித்தால் தான்- எந்தக் கொம்பன் பிடியில் சிக்கியிருந்தாலும் சரிஅரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். இல்லையேல் இதுவும் 'அந்த " லிஸ்டில் தான் இடம் பெறும். குறைந்த பட்சம் நடவடிக்கைகளில் அரசியல், பிற மத குறுக்கீடு இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதும். செய்வார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X