சென்னை: சென்னை, மெரினாவில் அமைக்கப்படும், ஜெயலலிதா நினைவிடம், 27ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், போயஸ் தோட்டத்தில் உள்ள, ஜெ., நினைவு இல்லம், 28ம் தேதி முதல், மக்கள் பார்வைக்கு திறக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, சென்னை, போயஸ் கார்டனில், அவர் வசித்து வந்த, 'வேதா இல்லம்' நினைவு இல்லமாக மாற்றப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.அதன்படி, அவரது இல்லம் அமைந்த நிலத்தை, அரசு கையகப்படுத்தியது. அதற்கு இழப்பீடாக, 68 கோடி ரூபாய், அரசு சார்பில், நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வீட்டை, நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, அவரது வீடு முழுதும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. அவர், முக்கிய தலைவர்களுடன் எடுத்த படங்கள், பயன்படுத்திய பொருட்கள், பூஜை பொருட்கள் போன்றவை, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. ஜெ., நினைவிடம், வரும், 27ம் தேதி திறக்கப்பட உள்ளது.
ஆனால், ஜெ., நினைவு இல்லம் திறப்பு குறித்து, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், வரும், 28ம் தேதி முதல், ஜெ., நினைவு இல்லம், பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியானது.இது குறித்து, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், ''ஜெ., நினைவு இல்லம் விரைவில் திறக்கப்படும். நினைவு இல்லம் திறக்கப்படும்போது, ஜெயலலிதா பயன்படுத்திய, 15 ஆயிரம் புத்தகங்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE