தெலுங்கானா முதல்வராகிறார் சந்திரசேகர ராவ் மகன்

Added : ஜன 23, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
ஐதராபாத் : ''தெலுங்கானாவின் அடுத்த முதல்வராக, முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ் விரைவில் பதவியேற்பார்,'' என, சட்டசபை துணை சபாநாயகர் பத்மா ராவ் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபை துணை சபாநாயர் பத்மா ராவ், தனியார், 'டிவி' சேனல் ஒன்றுக்கு
தெலுங்கானா முதல்வராகிறார்  சந்திரசேகர ராவ் மகன்

ஐதராபாத் : ''தெலுங்கானாவின் அடுத்த முதல்வராக, முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ் விரைவில் பதவியேற்பார்,'' என, சட்டசபை துணை சபாநாயகர் பத்மா ராவ் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபை துணை சபாநாயர் பத்மா ராவ், தனியார், 'டிவி' சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தெலுங்கானா அரசியலில் விரைவில் மாற்றங்கள் நிகழ உள்ளன. ஆட்சியில் கூட மாற்றம் ஏற்பட உள்ளது. மாநிலத்தின் அடுத்த முதல்வராக, முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ், விரைவில் பொறுப்பேற்பார்.


latest tamil news


அடுத்த மாதம் இந்த மாற்றம் ஏற்படும். இது பற்றி, சந்திரசேகர ராவ் குடும்பத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆச்சர்யமோ, அதிசயமோ எதுவும் இல்லை. ஏனெனில், அரசின் நல திட்டங்கள் அனைத்தும், ராமாராவின் ஆலோசனைப்படி தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kalyanaraman - Chennai,இந்தியா
29-ஜன-202110:00:24 IST Report Abuse
R.Kalyanaraman மகனை முதல் அமைச்சர் ஆக்கிவிட்டார் சந்திரசேகர ராவ். அடுத்து அவர் பேரனை முதல் அமைச்சர் ஆக்குவார். பிறகு கொள்ளை தான். இவர்களுக்கு கொஞ்சம்கூட வெட்கமாக இல்லயா.
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
24-ஜன-202107:27:55 IST Report Abuse
MANIAN K குடும்ப சொத்தை ஒப்படைத்தார்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஜன-202115:51:29 IST Report Abuse
Endrum Indian அச்சு அசலாக முஸ்லீம் நேரு காங்கிரஸ் தான் இது அங்கே பப்பு பிரியங்கா இங்கே அன்ணன் தங்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X