ஓமலுார் : கிரிக்கெட் வீரர் நடராஜனுடன், 'சாரட்' வண்டியில் வலம் வந்த, எஸ்.ஐ., சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், ஆஸ்திரேலியா பயணத்தை முடித்து, நேற்று முன்தினம், சொந்த ஊரான, சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டிக்கு வந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்க, மக்கள் திரண்டதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நடராஜனை, 'சாரட்' வண்டியில் அழைத்துச் சென்றபோது, அதில் அமர்ந்தபடி, தாரமங்கலம் எஸ்.ஐ., சிவகுமார், வீடு வரை சென்றார். அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல், வண்டியில் சொகுசாக அமர்ந்து வந்ததாக சர்ச்சை எழுந்தது.
ஓமலுார் டி.எஸ்.பி., சோமசுந்தரம் கூறுகையில், ''கொரோனா தடுப்பு விதிகள் காரணமாக, நடராஜனை யாரும் தொடாமல், பாதுகாப்பாக அழைத்துச் செல்லவே, எஸ்.ஐ., அருகில் இருக்க அறிவுறுத்தப்பட்டார்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE