2வது திருமணம் செய்ய முயன்ற கணவனை கொன்ற மனைவி; இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள் கர்நாடக மாநிலத்தில் வெடி பொருள் வெடித்து 8 பேர் பலிஷிவமொகா: கல் குவாரியில், பாறைகளை வெடிக்க பயன்படுத்தும் வெடி பொருள் வெடித்து சிதறியதில், எட்டு பேர் பலியாயினர். கர்நாடகாவின் ஷிவமொகா மாவட்டம், ஹுனசோடு பகுதியில், கல்குவாரிகள் உள்ளன. இங்குள்ள பாறைகளை வெடிக்க வைத்து கற்களாகவும், சிறிய பாறைகளாகவும் மாற்ற, 'ஜெலட்டின்' போன்ற வெடி பொருட்கள்
today crime, round up, இன்றைய கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்கர்நாடக மாநிலத்தில் வெடி பொருள் வெடித்து 8 பேர் பலி

ஷிவமொகா: கல் குவாரியில், பாறைகளை வெடிக்க பயன்படுத்தும் வெடி பொருள் வெடித்து சிதறியதில், எட்டு பேர் பலியாயினர். கர்நாடகாவின் ஷிவமொகா மாவட்டம், ஹுனசோடு பகுதியில், கல்குவாரிகள் உள்ளன. இங்குள்ள பாறைகளை வெடிக்க வைத்து கற்களாகவும், சிறிய பாறைகளாகவும் மாற்ற, 'ஜெலட்டின்' போன்ற வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.அத்தகைய வெடிபொருட்கள், லாரியில் வைக்கப்பட்டிருந்தன. அந்த லாரி, நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில், எட்டுக்கும் அதிகமானோர், உடல் சிதறி இறந்தனர்.


latest tamil news'பேஸ்புக்' தகவல் திருட்டு 2 நிறுவனம் மீது வழக்கு -

புதுடில்லி: இந்தியாவில், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் இருந்து, 5.62 லட்சம் பேரின் தகவல்களை திருடியது தொடர்பாக, பிரிட்டனைச் சேர்ந்த இரு நிறுவனங்கள் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

ரூ.1,000 கோடி போதை பொருள் இலங்கையை சேர்ந்த இருவர் கைது

புதுடில்லி: துாத்துக்குடி அருகே, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், முக்கியக் குற்றவாளிகளான, இலங்கையைச் சேர்ந்த இரண்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


தமிழக நிகழ்வுகள்


25 கிலோ நகை கொள்ளையர்கள் கைது


ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் துப்பாக்கி முனையில் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ம.பி.,யை சேர்ந்தவர்கள் ஐதராபாத் அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கணவனை கொன்ற மனைவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனது மனைவியின் உடல் நலனை காரணம் காட்டி 2வது திருமணம் செய்ய முயன்ற மில் தொழிலாளி பிரபு(38) என்பவரை அவரது மனைவி உமாமகேஷ்வரி(30) வெட்டி படுகொலை செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் உமாமகேஷ்வரியை கைது செய்தனர்.வாலிபர் எரித்துக் கொலை: போலீஸ் விசாரணை தீவிரம்

தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் வைகைபுதுார் அருகே எரித்து கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் விருவீடுவை சேர்ந்த ஆனந்தராஜ் 29, என்பது தெரியவந்துள்ளது. சிலரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தேவகோட்டை அருகே 80 பவுன் நகை கொள்ளை

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் கார்மேகம் மனைவி ராஜாமணி 60, வீட்டு பூட்டை உடைத்து 80 பவுன் தங்கநகை, ஆறரை கிலோ வெள்ளி, ரூ.12 ஆயிரம் திருடப்பட்டது.

இந்த தம்பதியின் இளைய மகன் சுரேஷ், மனைவி காவேரியுடன் வெளிநாட்டில் வசிக்கிறார். காவேரி, ராஜாமணியின் நகைகள் கோட்டூர் வீட்டில் இருந்தன. ஜன., 18ல் ராஜாமணி வீட்டை பூட்டிவிட்டு அச்சனி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று நேற்று வீடு திரும்பிய போது திருட்டு நடந்ததை அறிந்தார். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சமாகும். வேலாயுதபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மருமகளுக்கு கொலை மிரட்டல்: மாமனார், மாமியார் மீது வழக்கு

விருத்தாசலம்: வரதட்சணையை திருப்பிக் கேட்ட மருமகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாமனார், மாமியார் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.விருத்தாசலம் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி சத்தியபிரியா. கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது.சத்தியபிரியா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, சென்னையில் நடந்த சாலை விபத்தில் ஜெகதீசன் இறந்தார்.இந்நிலையில், சத்தியபிரியா தான் வரதட்சணையாக கொண்டு வந்த, 25 சவரன் நகை, 18 லட்சம் ரூபாய் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை திருப்பித் தரும்படி கேட்டார்.அதற்கு ஜெகதீசன் தந்தை ராஜகோபால், தாய் மணிமேகலை, மகன் சதீஷ்குமார் ஆகியோர் தர மறுத்து, சத்தியபிரியாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில், ராஜகோபால் உட்பட மூவர் மீதும் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


latest tamil news


சென்னையில் சட்ட விரோதமாக பதுங்கி இருந்த போதை பொருள் கடத்தல் மன்னன்கள் கைது

சென்னை:சென்னையில் சட்ட விரோதமாக பதுங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன்கள் இரண்டு பேரை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

யானையின் காதில் தீ 2 கொடூரன்கள் கைது

கூடலுார்:முதுமலையில், காட்டு யானையின் காதில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இருவரை, வனத்துறையினர் கைது செய்தனர்.

கிணற்றை காணோம்: போலீஸில் புகார்

நாகர்காவில்:நடிகர் வடிவேல் பட காமெடி பாணியில், இரணியல் அருகே, 'கட்டிமாங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட மொட்டவிளையில் கிணற்றை காணவில்லை' என, ஊர் தலைவர் செல்லதுரை, இரணியல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மகளை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்திய தாய் கைது

மதுரை : மதுரையில் ஜெராக்ஸ் கடையை வாடகைக்கு எடுத்து கல்லுாரியில் படிக்கும் மகளையே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் தமிழ்ச்செல்வி 42, கைது செய்யப்பட்டார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X