பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அதெல்லாம் மறக்க முடியுமா?

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (162)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்கார்த்திக்குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தேர்தல் நெருங்குவதால், 'தி.மு.க., ஹிந்து விரோத கட்சி இல்லை' என, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், இரட்டை வேடம் போடுகிறார். நம்மை எல்லாம், மறதி மன்னர்கள் என நினைத்து விட்டாரா?தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் தந்தை முத்துவேலர்,
ithu ungal idam, இது உங்கள் இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்


கார்த்திக்குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தேர்தல் நெருங்குவதால், 'தி.மு.க., ஹிந்து விரோத கட்சி இல்லை' என, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், இரட்டை வேடம் போடுகிறார். நம்மை எல்லாம், மறதி மன்னர்கள் என நினைத்து விட்டாரா?தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் தந்தை முத்துவேலர், திருக்குவளை சிவன் கோவிலில் இசைக் கலைஞராக பணியாற்றியவர். அவர் வழியில் வந்த குடும்பம் தான், ஹிந்து மதத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது.சங்கராபுரம் முன்னாள், எம்.பி., ஆதிசங்கரரின் நெற்றியில் இருந்த குங்குமத்தைப் பார்த்து, 'ரத்தம் வடிகிறதே...' என பரிகாசம் செய்தார், கருணாநிதி.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், துணைவி ராசாத்தி மற்றும் மருமகள் துர்கா ஆகியோரது நெற்றியில் இருப்பது மட்டும், அவருக்கு ரத்தமாக தெரியவில்லை.

தி.மு.க.,வில் இருந்தாலும், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், சிறந்த ஆன்மீகவாதி. 1996ல் கதர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தீ மிதித்தார். இதற்காக, அவரின் அமைச்சர் பதவியை பறித்தார், கருணாநிதி. மருமகளை மட்டும் பதவி நீக்கம் செய்யவில்லை.'என் மனைவி துர்கா, கோவிலுக்கு செல்கிறார்' என, ஸ்டாலின் கூறுகிறார். ஊர் அறிந்த ரகசியத்தை ஒப்புக்கொண்டு, ஓட்டு வேட்டை நடத்துகிறார்.


latest tamil news


ஸ்டாலின் தங்கை கனிமொழி, 'திருப்பதி உண்டியலுக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு? பெருமாள், சக்தி உள்ளவராக இருந்தால், அவரே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது தானே?' என, விமர்சித்தார்.அப்படி பேசியவருக்கு, திருப்பதி கோவிலில் என்ன வேலை? அங்கு ஏன் செல்ல வேண்டும்?திடீரென ஸ்டாலின், ஹிந்து மீது அக்கறை காட்டுகிறார். ஆண்டாளை, வைரமுத்து கீழ்த்தரமாக விமர்சித்த போது, அவர் கண்டிக்கவில்லை.

கந்த சஷ்டி கவசத்தை, கருப்பர் கூட்டம் இழிவாக பேசிய போது, ஸ்டாலின் எங்கு மறைந்திருந்தார்?கிறிஸ்துவ மத குரு ஒருவர், 'ஹிந்து என்றாலே, உடம்பெல்லாம் எரிகிறது...' என்றபோது, ரசித்து மகிழ்ந்தவர் தான், இந்த ஸ்டாலின்.முஸ்லிம் திருமண விழாவில், ஹிந்து சடங்கு குறித்து கொச்சைப்படுத்தி பேசியவர், இதே ஸ்டாலின் தான்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில், தனக்கு கொடுக்கப்பட்ட திருநீறை கீழே கொட்டி அவமதித்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டபோது, குங்குமத்தை அழித்து, ஹிந்துக்களின் மனதை காயப்படுத்தினார்.மற்ற மத விழாக்களில் பங்கேற்று, ஹிந்து மதத்தை இழிவுப்படுத்துவது, தி.மு.க., தலைவருக்கு மிகவும் பிடித்த செயல்.தேர்தலுக்காக, 'தி.மு.க., ஹிந்து விரோத கட்சி அல்ல' என கெஞ்சும் அளவிற்கு வந்து விட்டார். ஆனால், தி.மு.க.,வின் இரட்டை வேஷத்தை, ஹிந்துக்கள் தெளிவாக புரிந்துள்ளனர்; இனி அவர்களை ஏமாற்ற முடியாது.

Advertisement




வாசகர் கருத்து (162)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பழனி - Madurai,இந்தியா
23-ஜன-202123:39:55 IST Report Abuse
பழனி ஹிந்து துரோக திமுக, ஒழியட்டும் விடியட்டும்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
23-ஜன-202122:45:44 IST Report Abuse
vbs manian விசு ஐயர் நீங்கள் தமிழகத்தில்தான் இருக்கிறீர்களா. கழகத்தின் மூளை சலவை சக்தி கண்டு பிரமிக்கிறேன்.பாதி தமிழகத்தை பைக்குள் வைத்திருக்கும் அமைப்புக்கு ஆதரவு. பத்து சத அரசியல் அறிவு உள்ளவர் கூட வோட்டு போடமாட்டார்கள்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஜன-202114:01:42 IST Report Abuse
Visu Iyerமூளை சலவை செய்யும் அளவுக்கு நமக்கு மூளை இல்லை என்றா நினைக்கிறீர்கள்.. மூளை சலவை செய்வது.. வேறு நிறத்தில் உள்ள கட்சியில்... அதை நினைத்து இப்படி சொல்கிறீர்கள் என்பது புரிகிறது.....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-ஜன-202122:29:10 IST Report Abuse
Visu Iyer ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது நிர்மாண பணி முடிக்கப்பட்ட திருத்தணி முருகன் கோவில்.. இன்னமும் இப்போ ஈபிஎஸ் ஆட்சி முடியும் வரை அப்படியே இருக்கிறேதே ... கலைஞர் ஆட்சியில் பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இருக்கிறதே... அதை நினைத்து கூட பார்க்காத நன்றி கெட்டவர்களை இந்து என்றா சொல்ல விரும்புகிறீர்கள்..
Rate this:
karutthu - nainital,இந்தியா
25-ஜன-202118:57:41 IST Report Abuse
karutthuவிசு ஐயர் மாதிரி ஒருவர் இருந்தால் போதும் ப்ராமண சமுதாயம் உறுப்புட்டுடும் .ஆனால் இவர் ஒரிஜினல் பிராமணர் மாதிரி இல்லையே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X