அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது'

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (28)
Share
கோல்கட்டா : “பணம், அதிகாரம் மற்றும் அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தினால், அதை தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது,” என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரித்துள்ளார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, தலைமை தேர்தல்
'அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால்
 தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது'

கோல்கட்டா : “பணம், அதிகாரம் மற்றும் அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தினால், அதை தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது,” என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.


latest tamil news


தேர்தல் பணிகளை மேற்பார்வையிட, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், மேற்கு வங்கத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், சுனில் அரோரா கூறியதாவது:

பணம், அதிகாரம் மற்றும் அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தினால், அதை தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது.
தேர்தல் செலவுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி, பணம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க, உரிய நடவடிக்கைகளை எடுப்பார். மாநிலத்தின் பல பகுதிகளில், அரசியல் சார்ந்து வன்முறைகள் அரங்கேறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், அரசியல் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணியில் நடக்கும் வன்முறை சம்பவங்களில், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். தேர்தல் அறிவிப்புக்குப் பின், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
எல்லைப் பகுதியில் உள்ள மக்களை, குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஓட்டளிக்கும்படி, எல்லைப் பாதுகாப்புப் படையினர் மிரட்டுவதாக புகார் எழுந்தது; அது, மிகவும் துரதிஷ்டவசமானது. நாட்டின் சிறந்த படைப் பிரிவினர் அவர்கள்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, அதற்கான ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X