சிவில் சர்வீஸ் தேர்வு மீண்டும் எழுத முடியாது: மத்திய அரசு அறிவிப்பு

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: 'சிவில் சர்வீஸ்' முதல் நிலை தேர்வை, கடைசி முறையாக கடந்த ஆண்டு எழுத முடியாதவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பளிக்க, மத்திய அரசு மறுத்துள்ளது.யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும், இந்திய ஆட்சிப் பணியான, ஐ.ஏ.எஸ்., இந்திய வெளியுறவு பணியான, ஐ.எப்.எஸ்., இந்திய போலீஸ் பணியான, ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது.கடந்த

புதுடில்லி: 'சிவில் சர்வீஸ்' முதல் நிலை தேர்வை, கடைசி முறையாக கடந்த ஆண்டு எழுத முடியாதவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பளிக்க, மத்திய அரசு மறுத்துள்ளது.latest tamil news


யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும், இந்திய ஆட்சிப் பணியான, ஐ.ஏ.எஸ்., இந்திய வெளியுறவு பணியான, ஐ.எப்.எஸ்., இந்திய போலீஸ் பணியான, ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது.கடந்த ஆண்டு முதல் கட்ட தேர்வு, மே, 31ல் நடக்க இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, அக்., 4ல் நடந்தது.

இந்நிலையில், ரச்சனா சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத, எனக்கு கடந்த ஆண்டு தான் கடைசி வாய்ப்பாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, தேர்வை எழுத முடியவில்லை. என்னை போல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், முதல் நிலை தேர்வை எழுத, எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


latest tamil news


கடந்த விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'கொரோனாவால் தேர்வு எழுத முடியாமல்போன, கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது' என்றார். இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய பணியாளர் நலத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கடந்த ஆண்டு கடைசி முறையாக முதல் நிலை தேர்வு எழுதாதவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் எண்ணம் இல்லை. இது பற்றி பதில் மனு தாக்கல் செய்ய, அவகாசம் தேவை' என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை, 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜன-202108:03:56 IST Report Abuse
swaminathan Muthukrishnan as a supporter of bjp I felt very uncomfortable on their decision..
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் SOME THINGS ARRIVE IN THEIR OWN MYSTERIOUS HOUR, ON THEIR OWN TERMS AND NOT YOURS, TO BE SEIZED OR RELINQUISHED FOREVER. - GAIL GOD-WIN
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-ஜன-202107:32:26 IST Report Abuse
Bhaskaran இது அநீதி ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்பதுதான் அரசுக்கு கவுரவம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X