சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பால் தினகரன் அலுவலகங்களில் 3வது நாளாக சோதனை

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
சென்னை:'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவரும், கிறிஸ்துவ மதபோதகருமான பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில், மூன்றாவது நாளாக நேற்றும், வருமான வரி சோதனை தொடர்ந்தது.'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில், கிறிஸ்துவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு, வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.வரி

சென்னை:'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவரும், கிறிஸ்துவ மதபோதகருமான பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில், மூன்றாவது நாளாக நேற்றும், வருமான வரி சோதனை தொடர்ந்தது.



latest tamil news


'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில், கிறிஸ்துவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு, வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.வரி ஏய்ப்புஇயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிக்கு, முறையாக வரி செலுத்தவில்லை என, வருமான வரித் துறைக்கு புகார் வந்தது.மேலும், கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் ஜெபக் கூட்டங்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரக் கூடிய நன்கொடைகளை குறைத்து காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் வந்தன.

விசாரணைஇந்த புகார்களின்படி, சென்னை, கோவை உட்பட, பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில், வருமான வரித் துறை யினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை பாரிமுனை பிரசார அரங்கம், அடையாறு ஜீவரத்தினம் நகர் வீடு, ஆர்.ஏ., புரம் இயேசு அழைக்கிறார் அரங்கம் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.இதே போல, கோவையில், காருண்யா பல்கலை, காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை தொடர்ந்தது.


latest tamil news


இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:இயேசு அழைக்கிறார் அமைப்பில், நேற்று மூன்றாவது நாளாக சோதனை தொடர்ந்தது. மூன்றாவது நாளும் வரி ஏய்ப்பு செய்ததற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, குழும அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருந்தாலும், சோதனை முடிந்த பின், வெளிநாட்டில் உள்ள பால் தினகரனுக்கு, சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
23-ஜன-202118:20:02 IST Report Abuse
Narayanan there are other two three persons also to be investigated Era sargunan, Seeman etc.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
23-ஜன-202118:12:26 IST Report Abuse
Anand இவன் இன்னும் பாத்ரூமில் வழுக்கி விழவில்லையா?
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஜன-202117:05:58 IST Report Abuse
J.V. Iyer டெல்லியில் நடுக்கும் இடைத்தரகர்கள் போராட்டத்திற்கு இவர் தாராள பண உதவி செய்வதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று கேள்வி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X