புதுக்கோட்டை: ''விவசாயி என்று கூறும் தமிழக முதல்வர், டில்லி சென்றபோது ஏன் போராடும் விவசாயிகளை சந்திக்கவில்லை,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை, அரிமளத்தில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது: விவசாயி என்று தன்னை சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர், பிரதமரை சந்திக்க டில்லி சென்ற போது, அங்கு போராடும் விவசாயிகளை ஏன சந்திக்கவில்லை. விவசாய சட்டங்கள் நியாயமானது என்று முதல்வர் கூறுகிறார்.

பத்தாண்டுகள் அ.தி.மு.க., தமிழகத்தை ஆண்டுள்ளது. துாத்துக்குடி துப்பாக்கி சூடு தான், இவர்கள் செய்த சாதனை. மத்திய பா.ஜ., அரசு நாளை ஒரே நாடு ஒரே கட்சி என்று கூறும். அதற்கு அடுத்து, ஒரே நாடு ஒரே தலைவன் என்று கூறும். அமெரிக்க மக்கள் விழித்தெழுந்து, அங்கு அதிபரை மாற்றியது போன்று, இந்தியாவிலும் இன்னும், 3 ஆண்டுகளில் பொதுமக்கள் விழித்து எழுந்து, இந்தியாவிலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவர். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE