முத்தான மூன்று திட்டங்கள்: முதல்வர் இன்று அறிவிப்பாரா?

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (12) | |
Advertisement
கோவை: கோவைக்கு இன்று(ஜன.,23) வரும் முதல்வர் பழனிசாமி, மூன்று முக்கிய திட்டங்களை அறிவிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, முதல்வர் பழனிசாமி, கோவைக்கு இன்று வருகிறார். கோவையில் பிரசாரத்தை துவங்கும் அவர், புதிய சில திட்டங்களையும் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கோவை மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகவுள்ள மெட்ரோ ரயில்
Coimbatore, Edappadi Palanisamy, Tamil Nadu CM,ADMK

கோவை: கோவைக்கு இன்று(ஜன.,23) வரும் முதல்வர் பழனிசாமி, மூன்று முக்கிய திட்டங்களை அறிவிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, முதல்வர் பழனிசாமி, கோவைக்கு இன்று வருகிறார். கோவையில் பிரசாரத்தை துவங்கும் அவர், புதிய சில திட்டங்களையும் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கோவை மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகவுள்ள மெட்ரோ ரயில் திட்டம், தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ள புதிய விமான நிலையம், மத்திய சிறை இடமாற்றம் ஆகிய திட்டங்களை அவர் அறிவிப்பதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் பரவியுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம்


மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான, 19 நகரங்களில் ஒன்றாக கோவையை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், 2011 நவம்பரில் தேர்வு செய்தது. ஆனால், 10 ஆண்டுகளாக இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை கூட தயார் செய்யப்படவில்லை. அதே நாளில்தான், கேரளா மாநிலம், கொச்சியும் இத்திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டது. அங்கு, 2017ம் ஆண்டிலேயே மெட்ரோ ரயில் இயங்கத் துவங்கிவிட்டது.குஜராத்தின் ஆமதாபாத்திலும், பணிமுடிந்து ரயில் இயக்கப்படுகிறது. புனே, சூரத் நகரங்களில் பணிகள் முடியவுள்ளன. அந்த பட்டியலில் இல்லாத திருவனந்தபுரம், கோழிக்கோடு நகரங்களில், 'லைட் மெட்ரோ' திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இவை தவிர்த்து, ஒன்பது நகரங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. பல முறை, சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி திட்ட அறிக்கை கூட தயார் செய்யப்படவில்லை.இதற்கிடையில், மெட்ரோ ரயிலுக்கான தடங்களில், பெரிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், மெட்ரோ ரயில் திட்டத்தை அ.தி.மு.க., அரசு புதைத்து விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.ஆனால், புதைமின்வடம் போல பூமிக்கடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆளும்கட்சியினர் கூறி வருகின்றனர். இதற்கான அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.latest tamil newsபுதிய விமான நிலையம்


கடந்த, 2010ம் ஆண்டில் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு, 613 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இன்று வரை, 100 ஏக்கர் கூட கையகப்படுத்தப்படவில்லை. நிதி பற்றாக்குறை, வழக்குகள் என, பல காரணங்கள் உள்ளன.கடந்த பத்தாண்டுகளில், கோவை பல விதங்களில் வளர்ச்சியடைந்து, கோவை சர்வதேச விமானநிலையம் இந்தியாவின், 'பிஸி'யான விமான நிலையங்களில், 20வது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதை விட, கோவை நகருக்கு வெளியே, 4,000 ஏக்கர் பரப்பளவில், 75 லட்சம் பயணிகளைக் கையாளும் தொலைநோக்குடன் புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, 'கொடிசியா' அமைப்பு கோரியுள்ளது. அதற்கான திட்டத்தையும் முதல்வர் அறிவிக்க வாய்ப்புள்ளது.
சிறை இடத்தில் வன உயிரினப் பூங்கா!


தற்போதுள்ள மத்திய சிறை, 165 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதன் வளாகத்தில் பல ஆயிரம் மரங்கள் இருப்பதால் கோவை நகருக்கான நுரையீரலாக செயல்படுகிறது. மத்திய சிறையை நகருக்கு வெளியே இடம் மாற்றிவிட்டு, அங்கு சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என, 2010ம் ஆண்டில் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.சிறை வளாகத்தில், செம்மொழிப் பூங்கா என்று பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டது. வழக்கம்போல அந்தப் பணியும் நடக்கவேயில்லை. மீண்டும் அந்தத் திட்டத்தைத் துாசி தட்டி, மத்திய சிறையை நகருக்கு வெளியே அமைத்துவிட்டு, தற்போதுள்ள சிறை வளாகத்தில் தாவரவியல் பூங்காவும், வண்டலுார், மைசூரு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருப்பது போன்ற வனஉயிரினப் பூங்காவும் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதையும் முதல்வர் இன்று அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. முதல்வரின் அறிவிப்புக்காக காத்திருக்கிறது கோவை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
23-ஜன-202117:13:56 IST Report Abuse
Vijay D Ratnam இந்தியாவின் மான்ச்செஸ்டர் என்று அழைக்கப்படும் தொழில் நகரம் கோயம்பத்தூர் இன்னும் பத்து ஆண்டுகளில் இப்போது இருப்பதை காட்டிலும் பன்மடங்கு பெருகிவிடும். இப்போதே பெங்களூர் மாதிரி தென்னிந்தியாவின் நம்பர் ஒன் மிகப்பெரிய தொழில் நகரமான கோவையின் விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் பாரிஸ் சார்லஸ் டி கோல் சர்வதேச விமான நிலையம் மாதிரி கோவை நகருக்கு வெளியே பெரிய அளவில் தேசிய நெடுஞ்சாலை, ரயில் மற்றும் மெட்ரோ போக்குவரத்து என்று சகலவசதிகளுடன் அமைக்கவேண்டும். இது அவசியமான தேவை.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
23-ஜன-202115:15:57 IST Report Abuse
Nagarajan D அறிவிப்பு வந்தால் நல்லதே ஆனால் வெறும் அறிவிப்பாகவே இருக்க கூடாது....
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
23-ஜன-202113:58:09 IST Report Abuse
r.sundaram வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே என்று பாடத்தான் தோன்றுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X