பொது செய்தி

இந்தியா

குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில் நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில், 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம் இடம் பெற உள்ளது.நம் நாட்டின், 71வது குடியரசு தினம், 26ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லி ராஜபாதையில், நாட்டின் பெருமையை பறை சாற்றும் வகையில், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு நடக்கவுள்ளது. ராணுவத்தின், 861 ஏவுகணை பிரிவு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், பிரமோஸ்
R Day 2021, Republic Day, Swamiye Saranam Ayyappa

புதுடில்லி: டில்லியில் நடக்க உள்ள குடியரசு தின அணிவகுப்பில், 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம் இடம் பெற உள்ளது.

நம் நாட்டின், 71வது குடியரசு தினம், 26ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லி ராஜபாதையில், நாட்டின் பெருமையை பறை சாற்றும் வகையில், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு நடக்கவுள்ளது. ராணுவத்தின், 861 ஏவுகணை பிரிவு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், பிரமோஸ் ஏவுகணையின் மாதிரி வடிவத்துடன் பங்கேற்கிறது.


latest tamil news


சமீபத்தில், ராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற, 861 ஏவுகணை பிரிவு வீரர்கள், 'துர்கா மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய்' ஆகிய கோஷங்களுடன், 'சுவாமியே சரணம் அய்யப்பா' என்ற கோஷத்தையும் எழுப்பினர். தீய சக்திகளை அழிக்க, புலியின் மீது, வில் மற்றும் அம்புடன் அமர்ந்துள்ள கடவுள் அய்யப்பனுக்கு செய்யப்படும் மரியாதையாக, இந்த சரண கோஷம் கருதப்படுகிறது.

இதையடுத்து, டில்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில், 'துர்கா மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய்' கோஷங்களுடன், 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷத்தையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதனால், குடியரசு தின அணிவகுப்பில், இந்த முறை, 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷத்தைக் கேட்கலாம்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naresh Giridhar - Chennai,இந்தியா
23-ஜன-202119:58:48 IST Report Abuse
Naresh Giridhar ஏன் பெருமாள் கோஷத்தை விட்டுட்டாங்க ?
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஜன-202113:15:43 IST Report Abuse
Malick Rajaஎரிபொருள் விலை வளர்ச்சி .. பொருளாதார வளர்ச்சி மைனசில் வளர்கிறது .டாலர் மதிப்பும் நல்ல வளர்ச்சி .. இவை போன்றவைகளை கொடுக்கும் நல்லாட்சிக்கு .. கோவிந்தா ..கோவிந்தா .. கோஷம் .. மோடி ஸ்வாஹா .. அமித்சா ஸ்வாஹா .. மத்திய அரசு குண்டாயிரம் நமஹ .. போன்றவையும் சேர்த்து விட்டால் அமோகம் விருட்சம் .....
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
23-ஜன-202119:17:09 IST Report Abuse
அறவோன் "அல்லாஹு அக்பர்" - இது எந்த கடவுள் சார்ந்த சொல்லோ, கோஷமோ அல்ல. "இறைவனே மிகப்பெரியவன்" என்பதன் (அரபி) மொழிபெயர்ப்பின் பொருள்
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
23-ஜன-202118:49:40 IST Report Abuse
Suman கேட்கவே சந்தோஷமா இருக்கிறது. மிக நல்ல விஷயம்... சுவாமியே சரணம்...நன்றி நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X