தமிழ்நாடு

யானை வழித்தடத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு; வனபாதுகாப்பு சட்டத்தை மறந்த அதிகாரிகள்

Added : ஜன 23, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், யானை வழித்தடங்களில், ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, கோரிக்கை எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில், கர்நாடக மாநில எல்லை வரையிலான சுற்றுப்புற பகுதிகள் யானைகள் வழித்தடமாக உள்ளன. பெரும்பாலான

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், யானை வழித்தடங்களில், ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, கோரிக்கை எழுந்துள்ளது.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில், கர்நாடக மாநில எல்லை வரையிலான சுற்றுப்புற பகுதிகள் யானைகள் வழித்தடமாக உள்ளன. பெரும்பாலான வழித்தடங்களில், வனத்துறை இடங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதோடு, வேலியும் அமைத்துள்ளனர். இதனால், யானைகள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதேபோல், பவானிசாகர் அணை நீர்ப்பரப்பு பகுதிகளையும் தாண்டி, வனத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து, விவசாயம் செய்வதால் தண்ணீர் அருந்த வரும், யானைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில், வன விலங்குகள் பாதையில், ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளை உடனடியாக அகற்ற, உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. பவானிசாகர் அணை நீர்ப்பரப்பு பகுதியான, சித்தன்குட்டையில் இருந்து, மின்வேலிகளை அகற்றும் பணி துவங்கியது. கண்ராமொக்கை, வால்கரடு, அய்யம்பாளையம், ஜெ.ஜெ.,நகர், பூதிக்குப்பை, சுஜ்ஜில்குட்டை உள்ளிட்ட நீர் தேக்க பகுதிகளில், ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட, சோலார் மின்வேலி, சிமெண்ட் தடுப்பு கற்கள், உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டன. ஆனால், விவசாயம் செய்யப்பட்ட நிலங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. பெரும்பாலான வனப்பகுதிகளில் யானை வழித்தடங்களில் ஆய்வு நடக்கவில்லை. இதற்கு, சில வனத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: சத்தி புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பவானிசாகர் வனப்பகுதியில் ஆய்வு செய்யும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், முக்கிய யானை வழித்தடம் உள்ள, பவானிசாகர் அணை நீர்ப்பரப்பு பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இதனால் யானைகள், விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X