பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் வசதியில்லை!

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : கிருஷ்ணா நீர்வரத்து தொடரும் நிலையில், அதை சேமிப்பதற்கு வசதியில்லாததால் பொதுப்பணித்துறையினர் திணறி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. இதில், 3.30 டி.எம்.சி., கொள்ளளவு உடைய புழல் ஏரியில், தற்போது 3.24 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு, வினாடிக்கு, 134 கன அடி
கிருஷ்ணா நீர், பொதுப்பணித்துறை, ஆந்திரா, நீர், தண்ணீர்,

சென்னை : கிருஷ்ணா நீர்வரத்து தொடரும் நிலையில், அதை சேமிப்பதற்கு வசதியில்லாததால் பொதுப்பணித்துறையினர் திணறி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. இதில், 3.30 டி.எம்.சி., கொள்ளளவு உடைய புழல் ஏரியில், தற்போது 3.24 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு, வினாடிக்கு, 134 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், அதே அளவு நீர், சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. அதில், தற்போது, 0.88 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவு உடையது.அதில், 3.34 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு, வினாடிக்கு, 280 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு, 127 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

பூண்டி ஏரி, 3.23 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. அதில், தற்போது, 3.15 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.ஏரிக்கு, வினாடிக்கு, 691 கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், அதில் இருந்து, வினாடிக்கு, 537 கன அடி நீர், இணைப்பு கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட தேர்வாய் கண்டிகை ஏரி, 0.50 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. அதில், தற்போது, 0.47 டி.எம்.சி., இருப்புஉள்ளது.

கால்வாய் வழியாக, வினாடிக்கு, 75 கன அடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு, 11.7 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, ஐந்து ஏரிகளிலும் சேர்த்து, 11.1 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.


latest tamil news


ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா நீர் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகிறது. நேற்று(ஜன.,22), வினாடிக்கு, 791 கன அடி நீர், ஊத்துக்கோட்டை, ஜீரோ பாயிண்ட் எல்லைக்கு வந்தது. நடப்பு நீர் வழங்கும் தவணை காலத்தில், 6.28 கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு வழங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து ஏரிகளும் முழுக்கொள்ளளவை நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்து வரும் கிருஷ்ணா நீரை சேமிப்பதற்கு வசதியில்லாததால், பொதுப்பணித்துறையினர் திணறி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ganesan - kk nagar chennai,இந்தியா
24-ஜன-202107:48:39 IST Report Abuse
r ganesan இங்கு விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோயில் தெருவில் ஒரு ஏரி இருக்கிறது. இதை உபயோகப்படுத்திக்கொள்ளலாம். இங்கு தண்ணி கழ்டம் தீரும்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
24-ஜன-202107:07:59 IST Report Abuse
blocked user கட்டாந்தரையில் அணை கட்டமுடியாது என்பது திராவிட மத கோட்ப்பாடுகளில் முக்கியமானது. இதைத்தான் அண்ணாயிசம் என்கிறார்கள்.
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
23-ஜன-202119:23:46 IST Report Abuse
K.ANBARASAN நாட்டிலேயே ஒரு மோசமான துறை ஒன்று உண்டு என்றால் அது தமிழ்நாடு பொதுப்பணி துறை தான். நாட்டிலேயே மோசமான அமைச்சகம் எது என்றால் தமிழ்நாடு நீர் வள அமைச்சகம் தான்
Rate this:
karutthu - nainital,இந்தியா
24-ஜன-202111:30:20 IST Report Abuse
karutthuஏண்டா கோவாலு .. யாரோ அன்பரசன் என்பவன் மஸ்கட் /ஓமன் லிருந்து கூவுறான் நாட்டிலேயே மோசமான துறை என்றால் அது பொதுப்பணித்துறை தான் ஏன்கிறான் அப்போ கோவாலு நாம இப்படி சொல்லலாமா இந்த நாட்டிலேயே மோசமானவன் என்றால் ஊர்ப்பக்கத்திலிருந்துகொன்டு மஸ்கட்/ஓமன் என்று கருத்துப்போடும் அன்பரசன் என்று சொல்லலாமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X