ஜி.எஸ்.டி., கட்டமைப்பால் சிறு தொழில்கள் பாதிப்பு: அவிநாசியில் ராகுல் பேச்சு

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (89+ 10)
Share
Advertisement
அவிநாசி: 'குழப்பம் நிறைந்த ஜி.எஸ்.டி., கட்டமைப்பால், சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன'' என, காங்., எம்.பி., ராகுல் பேசினார்.3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், கோவை விமான நிலையம் அருகே தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி, தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறார். தமிழ் மொழி,கலாசாரத்திற்கு எதிராக
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

அவிநாசி: 'குழப்பம் நிறைந்த ஜி.எஸ்.டி., கட்டமைப்பால், சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன'' என, காங்., எம்.பி., ராகுல் பேசினார்.

3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், கோவை விமான நிலையம் அருகே தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.


latest tamil news


காங்கிரஸ் எம்பி ராகுல் தமிழகம் வந்திருக்கிறார். கோவை, திருப்பூர், ஈரோட்டில் மூன்றுநாள் பிரச்சாரம் செய்கிறார். கோவையில் பேசிய அவர், தமிழக மக்களையும், கலாச்சாரத்தையும் பிரதமர் மோடி, இரண்டாம் தரமாகத்தான் கருதுகிறார் என்றார். தொழிலதிபர்களின் நலனுக்காக பிரதமர் உழைக்கிறார். நாட்டின் அத்தனை வளங்களையும் விற்க தயாராகி விட்டார். விவசாயிகளின் உரிமைகளை பறித்துவிட்டு, தொழிலதிபர்களின் வேலைக்காரர்களாக மாற்ற பார்க்கிறார். தமிழக இளைஞர்களுக்கு இப்போது வேலை வாய்ப்புகள் இல்லை. விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். மக்கள் புதிய அரசை விரும்புகிறார்கள். அதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்று ராகுல் பேசினார்.அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி, தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறார். தமிழ் மொழி,கலாசாரத்திற்கு எதிராக உள்ளார். ஒரே மொழி, ஒரே கலாசாரத்தை கொண்டு வர பாஜ., முயற்சி செய்கிறது. இந்தியாவில், பல மொழி, கலாசாரம், வாழ்க்கை முறை உள்ளது.


latest tamil news
இந்தியாவிற்கும், தொழிற்சாலை, தொழில் அமைப்புகள் தேவை. தமிழகம் எந்தவொரு விஷயத்திற்கும், இந்தியாவிற்கு முன்னுதாரணமாக உள்ளது. தமிழக மக்கள் புதிய வாழ்க்கை முறையையும் புதிய அரசையும் விரும்புகின்றனர். தமிழக மக்கள் இடையே எனக்கு ரத்த உறவு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


குறைந்த பட்ச வரி


திருப்பூரில், தொழில்துறையினருக்கு தோல் கொடுப்போம் என்ற தலைப்பில் சிறு குறு தொழிலதிபர்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.

அப்போது, ராகுல் கூறுகையில்,ஜிஎஸ்டியில் மறுகட்டமைப்பு தேவை. அதில் உள்ள குறைகளை தீர்க்க சிறு, குறு தொழிலதிபர்களுடன் கலந்தாலோசனை செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒரே வரி, குறைந்தபட்ச வரி அமல்படுத்தப்படும்.

வேளாண் மசோதா விவகாரத்தில் எதை செய்யக்கூடாதோ அதை செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. இதனால், விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேளாண் சட்டங்கள் நீக்கப்படும். அந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்.

சிறு குறு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான், சர்வதேச அளவில் நம்மால் சீனா, வியாட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் போட்டி போட முடியும். இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் தங்களது செயல்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். சிறுகுறு தொழில் முனைவோருக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், உங்களது கோரிக்கைக்கு ஆதரவாக பேசுவோம். இவ்வாறு அவர் பேசினார்.


வாழ்க்கை தரம்


அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த காங்., எம்.பி., ராகுல் பேசியதாவது; உங்களின் உற்சாகமான வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ., அரசு, ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே நாடு என்ற பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி, தமிழக அரசையும், தமிழக மக்களையும், தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என நினைக்கிறார்; தமிழக மக்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என, கருதுகிறார்.தமிழர்களின் உணர்வு அவர்களுக்கு தெரியாது; தமிழக மக்கள் எதை விரும்புகின்றனரோ அதை தான் செய்வார்கள். தமிழக மக்களை ஒரு போதும் விலை கொடுத்து வாங்க முடியாது. நாட்டின் விவசாயத்தை, 5,6 முதலாளிகளிடம் விற்று விடலாம் என, பிரதமர் கருதுகிறார்.

இந்திரா, ராஜிவ் ஆகியோர் தமிழக மக்களிடம், அரசியல் தாண்டி, குடும்ப உறவு வைத்திருந்தனர். அதை தான், தானும் விரும்புகிறேன்.தமிழக மக்கள் மக்கள் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த விரும்புகிறோம். தமிழகத்தின் நிலையை உயர்த்த, உறுதி கொண்டுள்ளோம். தமிழக இளைஞர்கள், வேலை வாயப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

சிறு, குறு தொழில் செய்வோருடன் கலந்து பேசினேன். ஒரு சில முதலாளிகளை மட்டும் ஊக்குவிக்கும் வகையில் பா.ஜ., அரசு செயல்படுகிறது என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். குழப்பமான ஜி.எஸ்.டி., கட்டமைப்பால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்துள்ளது எனவும், அவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற செயல்பாடுகளை மாற்றுவதற்காக தான், ஆதரவு கேட்கிறோம். நான் பொய்யுரை சொல்வதற்காக வரவில்லை; உண்மையை சொல்ல மட்டுமே வந்துள்ளளேன். பொய்யுரையை பிரதமரிடம் விட்டு விடுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.


போலீசார் குழப்பம்


பின், திருப்பூர் பயணமாகும் வழியில், அவிநாசிலிங்கம் பாளையம் சாலையோரம் உள்ள ஒரு பேக்கரி முன் வாகனத்தை நிறுத்திய ராகுல், அங்கு டீ குடித்து, கடைக்காரர்களிடம் பேசினார். அவருடன் மாநில காங்., தலைவர் அழகிரி, திருநாவுக்கரசு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மட்டுமே இருந்தனர். வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது பயண திட்டத்தில் இடம் பெறாத இந்நிகழ்வால் போலீசார் குழப்பமடைந்தனர்.

கோவையின் சின்னியம்பாளையத்தில் ராகுல் பேசும் போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறோம். தமிழகம் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழக உரிமைகளை, மக்களின் எதிர்பார்ப்புகளை பாதுகாப்போம். சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் தமிழக அரசை அச்சுறுத்தி, தனது கட்டுப்பாட்டில் வைக்க பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் என தெரிவித்தார்

அனுப்பர்பாளையம் பகுதியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும் போது, என்னுடைய மன்கி பாத்தை சொல்ல வரவில்லை மக்களின் மன்கி பாத்தை கேட்க வந்துள்ளேன். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால், பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (89+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
23-ஜன-202122:31:59 IST Report Abuse
vbs manian இவரது தமிழ்ப்பற்று புல்லரிக்கிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இவரது கட்சி செய்தது உலகத்துக்கே தெரியும்.இந்தியா இப்போது குடும்பத்தின் பிடியில் இல்லை. பல துறைகளிலும் வலிமை பெற்று வருகிறது. எல்லோருக்கும் காதில் பூ சுற்றுகிறார். திரும்பவும் இந்த பாவ பட்ட கட்சியின் கையில் இந்த தேசம் போகக்கூடாது.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
23-ஜன-202121:53:17 IST Report Abuse
வல்வில் ஓரி புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை: தமிழகத்தில் ஒரு லிட்டர் 90ஐ கடந்தது - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
23-ஜன-202120:57:41 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் TOOTH PASE 28 % மறக்க முடியுமா என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X