
டில்லியில் நடைபெறும் விழாக்களில் குடியரசு தினவிழா மிக விசேஷம்.

நம் ராணுவத்தின் பெருமையை விளக்கும் வகையில் வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும் நவீன ஆயுதங்கள் தாங்கிய வாகனங்கள் பீரங்கிகள் விமானங்கள் ஏவுகனைகள் அதற்கான விளக்கங்களுடன் வருவது கண்கொள்ளாக்காட்சியாகும்.

தங்களது மாநில கலாச்சாரத்தை விளக்கும் வகையில் கலைஞர்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூடிய வாகனங்களும் வலம்வரும்.

நேற்று நடந்த இதற்கான ஓத்திகையே மிகச்சிறப்பாக இருந்தது. நமது தமிழ்நாட்டு வாகனத்தில் பரதநாட்டிய உடையில் பெண்கள் நடனமாடியபடி வந்தனர்.

26 ந்தேதி நேரிலும் நேரில் பார்க்க முடியாதவர்கள் தொலைக்காட்சி மூலமாகவும் அவசியம் பார்க்கவேண்டிய நிகழ்வாகும்.

-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE