சிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது

Added : ஜன 23, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிறுத்தையை கொன்று, சமைத்து சாப்பிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மண்குளம் வனப்பகுதி அருகேயுள்ள முனிப்பாரா என்ற இடத்தில், கடந்த புதன்கிழமை அன்று, 6 வயதே ஆன ஆண் சிறுத்தை ஒன்று கொல்லப்பட்டு, அதன் உடல்பாகங்கள், சட்டவிரோதமாக விற்க முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு ரகசிய
சிறுத்தை, கேரளா, இடுக்கி, கைது, leopord

இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிறுத்தையை கொன்று, சமைத்து சாப்பிட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மண்குளம் வனப்பகுதி அருகேயுள்ள முனிப்பாரா என்ற இடத்தில், கடந்த புதன்கிழமை அன்று, 6 வயதே ஆன ஆண் சிறுத்தை ஒன்று கொல்லப்பட்டு, அதன் உடல்பாகங்கள், சட்டவிரோதமாக விற்க முயற்சி நடந்துள்ளது. இது தொடர்பாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பிகே வினோத் என்பவரது வீட்டில் சோதனை நடத்திய வனத்துறை அதிகாரிகள், அங்கு சிறுத்தையின் தோல், பற்கள், எலும்புகள் மற்றும் கறி கொஞ்சம் சமைத்த நிலையிலும், இன்னும் கொஞ்சம் சமைக்காத நிலையிலும் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.


latest tamil news



மேலும் சிறுத்தையை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட சாதனங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், சிறுத்தையின் உடல் பாகங்களை விற்பதற்காக, அதனை கொன்றது தெரியவந்துள்ளது. அதற்கான நபர்களை தேடி கொண்டிருந்த நிலையில் அவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில், கடந்த காலங்களிலும் வன விலங்குகளை கொன்று சாப்பிட்டது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பிகே வினோத், குரியகோஸ்(74), பினு(50), சலி குஞ்சப்பன்(54), மற்றும் வின்சன்ட்(50) ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வனப்பாதுகாப்பு சட்டம் பிரிவு 9,39,44,49,50,51 மற்றும் 57 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
24-ஜன-202109:28:57 IST Report Abuse
Hari இவர்களுக்கும் சல்மான் கான் போல மன்னிப்பு கொடுக்கலாமே. சட்டம் அனைவருக்கும் சமம்தான்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜன-202108:22:49 IST Report Abuse
Mani . V என்ன எழவுடா நடக்குது ஊரில்? ஒரு பன்னாடை கும்பல் யானைக்கு தீ வைக்குது. இன்னொரு ஈத்தரை கூட்டம் சிறுத்தை கறி சமைக்குது. சட்டம் சரியில்லாத பொழுது உங்களைப்போன்ற அயோக்கியர்களை நொந்து என்ன புண்ணியம்?
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
24-ஜன-202104:48:35 IST Report Abuse
கதிரழகன், SSLC சீனாக்காரன் கண்டதையும் திண்ணுதாண்டா கொரோனா வந்திட்டு. வெவரம் தெரியாத மடயங்களா, சாமி கவுச்சி தின்ன படைச்சத சாப்பிடுங்கடா . ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X