புதுடில்லி : தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை வரவேற்றும், அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்றும் டுவிட்டரில் நெட்டிசன்கள் டிரெண்ட் செய்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல், 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அவர் பேசும்போது, ''தமிழக மக்கள் இடையே எனக்கு ரத்த உறவு உள்ளது'' என்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் உடன் உள்ளார். தொடர்ந்து சிறு, குறு தொழில்துறையினர் உடன் நடந்த கலந்துரையாடலிலும் ராகுல் பங்கேற்று பேசினார்.

தமிழகம் வந்த ராகுலை பொதுமக்கள் மட்டுமல்ல சமூகவலைதளவாசிகளும் வரவேற்றுள்ளனர். அவரின் வருகையை முன்னிட்டு டுவிட்டரில் #TamilNaduWelcomesRahul, #Coimbatore ஆகிய ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. கோவையில் ராகுல் பேசிய பேச்சை குறிப்பிட்டு டிரெண்ட் செய்கின்றனர். ''எளிமையான தலைவர், தமிழகம் உங்களோடு இருக்கும்'' என அவருக்கு பாசிட்டிவ்வான கருத்துக்களையும் காண முடிந்தது. மேலும் மோடியை அவர் விமர்சனம் செய்த கருத்துக்களையும் சுட்டிக்காட்டி அதை டிரெண்ட் செய்தனர்.
இதேப்போன்று பிரதமர் நரேந்திர மோடி அசாம் சென்றுள்ளார். அங்கு சிவாசாகரில் நடந்த நிகழ்ச்சியில் நிலமற்ற 1.06 லட்சம் பேருக்கு பட்டா வழங்கும் விழாவில் அவர் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, ''இன்று நாடு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது. அவரது பிறந்தநாள் தேசிய பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்றார். மேலும், அசாம் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் இங்குள்ள மக்களின் தேவைகளை அறிந்து நாங்கள் பணியாற்றுகிறோம்'' என்றார் பிரதமர் மோடி.

பிரதமரின் அசாம் வருகை டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. #AssamWithPMModi, #Sivasagar, #ParakramDivas, #Assam, #AssamWelcomesModiji உள்ளிட்ட ஹேஷ்டாக்குளில் பிரதமரின் வருகையை வைத்து டுவிட்டர் தளவாசிகள் டிரெண்ட் செய்தனர். ''அசாம் மாநில மக்கள் என்றும் பிரதமர் மோடிக்கு துணையாக இருப்போம்'', எங்களின் கனவை நனவாக்கிய மோடிக்கு நன்றி. பிரதமர் மோடி ஒவ்வொரு முறை அசாம் வரும்போது எங்கள் மாநில மக்களுக்கு ஏதாவது நல்ல விஷயங்கள் நடக்கும், இன்றும் அதுபோல் நடந்துள்ளது. அனைத்து மாநிலங்களின் நலனுக்கும் பாடுபவர் மோடி. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் எல்லாவற்றிலும் கூடுதலாக கவனம் செலுத்தும் சிறந்த பிரதமர் என அவருக்கு பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE