பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததற்காக, பிரதமர் மோடிக்கு, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சானாரோ நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடும் எனக்கூறியுள்ளார்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை
கொரோனா தடுப்பூசி, பிரதமர் மோடி, பிரேசில் அதிபர், நன்றி

புதுடில்லி: கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததற்காக, பிரதமர் மோடிக்கு, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சானாரோ நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடும் எனக்கூறியுள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை பயன்படுத்த சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முன்னுரிமை அடிப்படையில் 20 லட்சம் கொரோனாதடுப்பூசிகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக்கூறி அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து, 20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கு நன்றி தெரிவித்து ஜெய்ர் போல்சனாரோ, மோடிக்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:

நமஸ்கர் ! பிரதமர் மோடி,சர்வதேச நெருக்கடியில் இருந்து கூட்டு முயற்சியின் மூலம் மீள்வதற்கு சிறந்த கூட்டாளியை பெற்றிருப்பதற்கு பிரேசில் பெருமை கொள்கிறது. இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைத்ததற்காக நன்றி. நமஸ்கர். எனக்கூறியுள்ளார்.



பிரேசில் மொழியிலும் இதே கருத்தை பதிவிட்டுள்ள போல்சனாரோ, அத்துடன் கடவுள் அனுமன் சஞ்சவினி மலையை தூக்கி வருவது போலவும், அதன் மேல் தடுப்பூசி படமும் இடம்பெற்றுள்ளது. இந்த படம், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


latest tamil news




இதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த பெருமை இருவருக்கும் உரியது. நாம் இணைந்து சுகாதாரத்துறையில், ஒத்துழைப்பை இன்னும் பலப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundaram sadagopan - Bengaluru,இந்தியா
24-ஜன-202109:56:13 IST Report Abuse
sundaram sadagopan ஓவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய தருணம் .
Rate this:
Cancel
23-ஜன-202123:19:53 IST Report Abuse
முருகன் பாரதம் பெற்ற தன்னிகரற்ற தங்க தலைவர், தவப்புதல்வன் மோடிஜி க்கு நோபல் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
23-ஜன-202120:20:00 IST Report Abuse
Nagarajan D சத்தம் கேக்குதாடா டுபாக்கூர் போராளிகளே நீங்க கதரனும் கதறி கதறியே சாவணும் நாங்க எல்லாம் சந்தோஷமா இருக்கணும் தேச பற்று உள்ள ஒருத்தரை உங்க கொள்ளை கூட்டத்தில் காட்டுங்கடா.... எல்லாம் கொள்ளை மயம்....கொள்ளையே கொள்கை என ஒரு கேவலமான கொள்கையோடு திரிபவர்களுக்கு இது ஒரு வயிறு எரியும் நேரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X