உலக சமுதாயத்தின் உண்மையான நண்பன்: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன்: அண்டை நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை இந்தியா அனுப்பியிருப்பதற்கு அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் கடந்த ஜன., 16-ம் தேதி தொடங்கியது. அது மட்டுமின்றி ஜன., 21 முதல் அண்டை நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசி அனுப்பி
india, corona, coronavirus, covid, vaccine, unitedstates, america,  உலகம், இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, தடுப்பூசி, அமெரிக்கா, பாராட்டு

வாஷிங்டன்: அண்டை நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை இந்தியா அனுப்பியிருப்பதற்கு அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் கடந்த ஜன., 16-ம் தேதி தொடங்கியது. அது மட்டுமின்றி ஜன., 21 முதல் அண்டை நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசி அனுப்பி வைத்து வருகிறது. முதல்கட்டமாக நேபாளத்துக்கு 10 லட்சம் தடுப்பு மருந்துகளும், பூடானுக்கு, 1.50 லட்சம், மாலத்தீவுகளுக்கு 1 லட்சம் , வங்கதேசத்துக்கு, 20 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி அனுப்பப்பட்டன. பாகிஸ்தான் நாடு கோரிக்கை வைக்காததால் அந்நாட்டுக்கு அனுப்பப்படவில்லை. வியாழனன்று அந்நாட்டிற்கு சீனா 5 லட்சம் சினோபார்ம் மருந்துகளை அனுப்பியது.


latest tamil news




இந்நிலையில் இந்தியாவின் இந்த முயற்சியை அமெரிக்கா பாராட்டியுள்ளது. அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துறை தனது டுவிட்டர் பக்கத்தில் “தெற்காசியாவில் லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசியைப் பகிர்ந்துள்ளீர்கள். உலக சுகாதாரத்தில் இந்தியாவின் பங்கை நாங்கள் பாராட்டுகிறோம். மாலத்தீவு, பூடான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி அனுப்பியுள்ளது. மேலும் பல நாடுகளுக்கு இதனை விரிவுப்படுத்த உள்ளது. தனது மருந்தைப் பயன்படுத்தி உலகளாவிய சமூகத்திற்கு உதவும் இந்தியா, ஒரு உண்மையான நண்பர்.” என பாராட்டியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kalyanaraman - Chennai,இந்தியா
24-ஜன-202110:30:48 IST Report Abuse
R.Kalyanaraman மோடியை பிடிக்காத காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மம்தா மற்றும் சில கட்சிகளுக்கு வயறு எரியுமே.
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
23-ஜன-202123:08:04 IST Report Abuse
Madhusoodhana Ramachandran உலகமே மோடி அவர்களின் அரசை போற்றிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள எதிரி (உதிரி) காட்சிகள் எதற்கெடுத்தாலும் ம த்தீய அரசை எதிர்க்க வேண்டும் என்ற கொள்கையுடன் ( அவர்களுக்கு தற்சமயம் வேறு கொள்கை கிடையாது ) எதிர்க்கிறார்கள். மக்களை எளிதாக எடைய போடக்கூடாது.
Rate this:
Cancel
sangu - coimbatore,இந்தியா
23-ஜன-202119:47:02 IST Report Abuse
sangu ப சி கருத்து என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X