பொது செய்தி

இந்தியா

லாலு உடல்நிலை மோசம்: டில்லி அழைத்து செல்ல முடிவு

Updated : ஜன 23, 2021 | Added : ஜன 23, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து அவரை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது லேசான நிமோனியா காரணமாக ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் மையத்தில்(ஆர்ஐஎம்எஸ்) லாலு சிகிச்சை
laluprasad, health, delhi, aims,  லாலுபிரசாத்,  உடல்நிலை, மோசம், டில்லி, எய்ம்ஸ், தேஜஸ்வி

புதுடில்லி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்தது. இதனையடுத்து அவரை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது லேசான நிமோனியா காரணமாக ராஞ்சியில் உள்ள ராஜேந்திர மருத்துவ அறிவியல் மையத்தில்(ஆர்ஐஎம்எஸ்) லாலு சிகிச்சை பெற்று வருகிறார்.


latest tamil news


இது தொடர்பாக ஆர்ஐஎம்எஸ் இயக்குநர் காமேஷ்வர் பிரசாத் கூறுகையில், கடந்த 2 நாட்களாக லாலுவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது. வெள்ளிக்கிழமை நிமோனியா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அவரது வயதை கருத்தில் கொண்டு, டாக்டர்களின் அறிவுரைப்படி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்களிடமும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இன்று அவர் டில்லி அழைத்து செல்ல வாய்ப்பு உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குடும்பத்தினர் சார்பில் ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

லாலு மகன் தேஜஸ்வி கூறுகையில், லாலு உடல்நிலை மோசமடைந்துள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது. டாக்டர்களின் அறிக்கை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,சவுதி அரேபியா
24-ஜன-202112:02:19 IST Report Abuse
Hari கேடுகெட்டவர்களுக்கு உதாரணம், இவர் ஒரு பிகார் கட்டுமரம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
24-ஜன-202110:41:21 IST Report Abuse
RajanRajan வுட்டுறாதீங்க டில்லி லண்டன் அமேரிக்கான்னு கொண்டு போங்க.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜன-202109:08:53 IST Report Abuse
Bhaskaran ஜெயிலில் இருக்கும்போது தான் நெஞ்சுவலி கொரோனா .எல்லாம் வரும் போலிருக்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X