அறிவியல் ஆயிரம்
நிலவின் பாறை
கடந்த 1972 டிச.7ல் நாசா நிலவுக்கு அப்பல்லோ 17 விண்கலத்தை ஈஜீன் செமன், ரொனால்டு இவன்ஸ், ஹாரிசன் ஸ்மிட் ஆகிய மூன்று விண்வெளி வீரர்களுடன் அனுப்பியது. மனிதர்களுடன் நிலவுக்கு அனுப்பிய கடைசி விண்கலம் இதுதான். இப்பயணத்தின் போது, நிலவில் 390 கோடி ஆண்டுகள் பழமையான பாறை துகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டது. இது நாசா மையத்தில் கண்ணாடி பெட்டியில் பாதுகாக்கப்பட்டிருந்தது. அமெரிக்க அதிபராக ஜோ பைடனின் வேண்டுகோளுக்கு இணங்க, இது, அதிபரின் வெள்ளை மாளிகை 'ஓவல்' அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
சாரணர் இயக்கம்
'ஸ்கவுட்' எனும் சாரணர் இயக்கத்தை பிரிட்டன் ராணுவ அதிகாரி பேடன் பவல் 1908ல் துவக்கினார். சில ஆண்டுகளுக்குள் உலகளவில் பரவியது. நாட்டுப்பற்று, ஆன்மிகம், அன்பு, பணிவு, பிறருக்கு உதவுதல், தன்னம்பிக்கை போன்ற பண்புகளை மாணவர்களிடம் உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். இது உற்று நோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற திறமைகளையும் வளர்க்கிறது. சாரண, சாரணியர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் 8 - 10, 11 - 17, 18 வயதுக்கு மேல் என மூன்று பிரிவுகள் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE